நீங்க ஓகே சொன்னா மட்டும் போதும். நாங்க தயாரா இருக்கோம் – ஐ.பி.எல் தொடரை நடத்த தயாராக இருக்கும் நாடு என்ன தெரியுமா ?

ipl
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்குமா இல்லையா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மார்ச் 29ஆம் தேதி துவங்கி இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் தற்போது வரை எந்த செய்தியும் இல்லாமல் இருக்கிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவின் டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதாக இருந்தது.

Ipl cup

- Advertisement -

தற்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் இந்த டி20 உலக கோப்பை தொடர் நடக்காது. இதன் காரணமாக அந்த இரண்டு மாதங்களை பயன்படுத்தி ஐபிஎல் தொடரை நடத்திவிடலாம் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி முடிவெடுத்திருக்கிறார் .

இதற்கு ஒரு பெரிய திட்டம் தேவை. இந்தியாவில் நடத்த முடியாது ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக நாடுகள், இலங்கை மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள் ஐபிஎல் தொடரிரை நடத்தி தருவதாக தாமே முன்வந்து வாக்குறுதி அளித்தனர்.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரை தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது இதுகுறித்து துபாய் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறுகையில்..

IPLNSG

துபாயில் உள்ள மைதானங்கள் அனைத்தும் டி20 லீக் போட்டிக்கு தயாராக இருக்கின்றன. இங்கு ஒன்பது ஆடுகளங்கள் உள்ளன அடுத்தடுத்து போட்டிகளை நடத்தும் வசதிகளும் இருக்கிறது. என்று கூறுகிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2009 ஆண்டு இங்குதான் ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement