பொதுவா எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டே பிடிக்காது. ஆனா இவர் பேட்டிங் பண்ண பாப்பேன் – டைமல் மில்ஸ் ஓபன்டாக்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தே, டெஸ்ட் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட். கிட்டத்தட்ட இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலையில் இருந்த அவர், தனது திறமையை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் தற்போதையை இந்திய டெஸ்ட் அணியில் ஒரு தவிர்க்க முடியாத வீரராகவும் மாறியிருக்கிறார். அவருடைய சமீபத்திய ஆட்டங்களை கண்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான தைமல் மில்ஸ் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். ரிஷப் பன்ட் குறித்து அவர் பேசியதாவது,

Pant

நான் ஒரு நாள் மட்டும் டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளேன். எனக்கு ஏற்படும் காயங்களால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் என்னால் விளையாட முடியாமல் போனது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பழைமையான இந்த டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதே எனக்கு பிடிக்காது. ஆனால் எப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பன்ட் பேட்டிங் விளையாட களத்திற்குள் வருகிறாரோ அப்போது மட்டுமே அந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பேன். அவர் விளையாடும் விடும் எனக்கு மகிழ்ச்சியை அளித்து அந்த போட்டியைப் பார்க்க என்னைத் தூண்டிவிடுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் அதனை ரசிக்கவும் வைக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ரிஷப் பன்ட் தான் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்றும் அவருடைய ஆட்டம் தான் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை தீர்மானிக்கும் என்றும் பல முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான்களே பாரட்டும் அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறார் ரிஷப் பன்ட். இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த வருடத்தில் இருந்து நிலையான அதே சமயம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், சில வாரங்களுக்கு முன்பு ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியிலில் 6வது இடம் பிடித்து அசத்தினார்.

Pant 1

அவரைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்து இடத்திற்குள் இடம்பிடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலந்தும் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் வருகிற ஜூன் 18ஆம் தேதி மோதவிருக்கின்றன.

- Advertisement -

Pant

இதற்கு முந்தைய வெளிநாட்டு தொடரான ஆஸ்திரேலிய தொடரில் தனது அற்புததமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரிஷப் பன்ட், இந்த போட்டியிலும் அது போன்று செயல்பட்டு இந்திய அணிக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement