ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை..! வாழ்த்திய சங்ககாரா..!

Smriti

இங்கிலாந்து நாட்டில் கியா லீக் என்ற மகளீர் கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் டி20 தொடரான இதில் பல்வேறு சர்வதேச வீராங்கனைகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் லீக் போட்டி ஒன்றில் இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் ஸ்ம்ரிதி மந்தனா அதிவேக அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

smiriti

இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா இந்த தொடரில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் என்ற அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த தொடரின் 9 வது லீக் போட்டி நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி ,லாபோரா லைட்னிங் அணியை எதிர்கொண்டது. மழை குறிக்கிட்டதால் இந்த போட்டி 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்த வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ம்ரிதி மந்தனா 18 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

பின்னர் களமிறங்கிய ,லாபோரா லைட்னிங் விக்கெட் இழப்பின்றி 67 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணியில் சிறப்பாக விளையாடியா இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மந்தனாவிற்கு ஆட்டநாகன் விருதும் வழங்கப்பட்டது.