தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம். காரணம் என்ன ? – உண்மை நிலவரம் என்ன ?

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான மகேந்திரசிங் தோனி இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தன்வசம் பல கோடி ரசிகர்களை வைத்துள்ளார். பொதுவாக சமூகவலைதளத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்றாலும் அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களையும், சில நிகழ்ச்சிகளையும் அவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களின் மூலம் பகிர்வது வழக்கம்.

Dhoni

அந்த வகையில் தோனி நிர்வகித்து வரும் ட்விட்டர் பக்கத்தில் சுமார் 8.20 மில்லியன் ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். பொதுவாகவே ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள் அதிகம் பின் தொடரும் ஆளுமைகள் ஆகியோருக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் ஆப்ஷனை வழங்கிவருகிறது.

- Advertisement -

ப்ளூ டிக் இடம்பெற்று ஒரு அக்கவுண்ட் இருந்தால் அது ஒரு அதிகாரப்பூர்வ வெரிஃபைட் அக்கவுன்ட் என்று அழைக்கப்படும். அப்படி தோனிக்கும் சொந்தமான ஒரு ட்விட்டர் பக்கம் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த ட்விட்டர் பக்கத்தில் உள்ள ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

dhoni 1

அதற்கு காரணம் யாதெனில் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் நீண்ட நாட்களாக எந்த ஒரு தகவலையும் தோனி பரிமாறாமல், பயன்படுத்தாமல் இருந்ததன் காரணமாக இந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று ட்வீட் செய்துள்ள தோனி அதன்பிறகு எந்த ஒரு ட்வீட்டும் செய்யவில்லை. இதனால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

Dhoni 1

ஆனால் இது எந்த அளவு உண்மை என்று இதுவரை உறுதியாகவில்லை. ஏனெனில் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது குறித்த செய்திகள் வெளியானதிலிருந்து அவரது ட்விட்டர் பக்கத்தை ரசிகர்கள் இணையதளத்தில் தேடி வருகின்றனர். ஆனால் இப்பொழுதும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் இருப்பது உறுதியாகி இருக்கிறது. தோனியின் ட்விட்டர் பக்கம் பயன்படுத்தாமல் இருப்பினும் அவரது ப்ளூ டிக் இன்னும் நீக்கப்படவில்லை என்பதே இதில் உண்மை.

Advertisement