என்ன பெரிய அமெரிக்க அதிபர் டிரம்ப். சச்சினை இப்படியா அழைப்பது கொதித்தெழுந்த ஐசிசி – விவரம் இதோ

Trump-2
- Advertisement -

அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் இன்று அவரது தனி சொகுசு விமானம் மூலம் அகமதாபாத் ஏர்போர்ட் வந்தடைந்தார். அவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் முதல்வர் ஆகியோர் மிகச் சிறப்பாக வரவேற்றனர். அதிபருடன் அவருடைய மனைவி மெலனியா ஆகியோரும் வந்திருந்தார்கள்.

trump

- Advertisement -

அதன் பிறகு அவர்கள் காந்தியடிகள் நீண்ட நாட்கள் இருந்த இடமான சபர்மதி ஆசிரமம் சென்று அங்கு சில நேரங்கள் கழித்த பிறகு அகமதாபாத் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆன மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தினார்கள். அதில் பிரதமர் மோடியை வாழ்த்தி பேசிய அதிபர் ட்ரம்ப் பிறகு இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோர் குறித்தும் பேசினார். அதில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பெயரை தவறாக உச்சரித்தார்.

trump 1

சச்சின் டெண்டுல்கர் பெயரை சுச்சின் டெண்டூல்கர் என்றும் விராட் கோலியின் பெயரை விரூட் கூலி என்றும் உச்சரித்தார். இதனை ஐசிசி தற்போது அவர்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. மேலும் சச்சின் டெண்டுல்கர் பெயரை மாற்றி கூறிய வார்த்தைகளை வைத்து ஒரு வீடியோ ஒன்றிணையும் ஐசிசி வெளியிட்டு வருகிறது. இதனை கண்ட இந்திய ரசிகர்கள் அதற்கு விமர்சனையான கமெண்டுகளையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement