சுஷாந்த் தற்கொலையை அடுத்து அண்டர் 19 அணியில் தற்கொலை செய்துகொண்ட வீரர் – விவரம் இதோ

- Advertisement -

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் அவரது வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு, பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படி ஒரு நல்ல மனிதரை இழந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Sushant 5

- Advertisement -

திரிபுரா மாநிலத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பெண் வீராங்கனை ஒருவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த இளம்பெண்ணின் பெய்து பெயர் அயந்தி ரியங். இவர் வெறும் 16 வயதுதான் ஆகிறது. திரிபுரா மாநிலத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார்.

கடந்த 16ம் தேதி வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அந்த வட்டாரத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வரை எந்த ஒரு அதிகாரபூர்வமான செய்தியும் வெளிவரவில்லை. கடந்த ஒரு வருடமாக இவர் மாநில அணிக்காக விளையாடி வந்துள்ளார். திறமை வாய்ந்த வீராங்கனையாக இருப்பதால் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியிலும் இவர் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ayanti

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்த இவரால் மன அழுத்தத்தை சரியாக கையாள முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தில் ஒரு சில சண்டைகள் ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக கூட இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று அந்த வட்டார செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.

Advertisement