கரீபியன் லீக் தொடரில் விளையாட இருக்கும் முதல் இந்திய வீரர் – பி.சி.சி.ஐ ஓகே சொன்னா போதும்

- Advertisement -

வெளிநாட்டு வீரர்கள் பொதுவாக எந்த ஒரு வெளிநாட்டு டி20 தொடரிலும் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஐபிஎல், கரீபியன் லீக், பாகிஸ்தான் லீக், வங்கதேச லீக் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடுகிறார்கள். ஆனால் இந்திய வீரர்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரர்கள் எந்த ஒரு வெளிநாட்டு தொடர்களிலும் பரகேற்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஓய்வு பெற்ற வீரர்கள் பிசிசிஐயின் அனுமதி பெற்று வெளிநாட்டு போதுகள் போட்டியில் பங்கேற்கலாம். அதன்படி ஏற்கனவே இந்தியாவின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் பிசிசிஐ அனுமதியோடு கனடாவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த வீரரான பிரவீன் தாம்பே தற்போது கரீபியன் லீக் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் இவருக்கு பிசிசிஐ-யின் அனுமதி கிடைத்தால் மட்டுமே விளையாட முடியும். திறமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பது உண்மைதான் தற்போது 48 வயதாகும் பிரவீன் தாம்பே இன்னமும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை வைத்து விளையாடிக்கொண்டே தான் வருகிறார்.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர் தற்போது கரீபியன் லீக் போட்டிக்காக ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். இதன் மூலம் முதல் இந்திய வீரர் ஒருவர் கரீபியன் லீக் போட்டியில் ஆடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். இருப்பினும் பிசிசிஐ அவருக்கு விளையாட ஏதும் ஆட்சேபனை இல்லை என்று சான்றிதழ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவர் இந்தத் தொடரில் விளையாட முடியும்.

- Advertisement -

அதற்காக அவர் பிசிசிஐ-யின் அனுமதிக்காக தற்போது காத்திருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற கரீபியன் லீக் தொடருக்கான ஏலத்தில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு அவர் ட்ரிபான்கோ அணியில் தேர்வாகியுள்ளார். தனது 43-வது வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இவர் 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Tambe

இந்நிலையில் தற்போது இவருக்கு 48 வயதில் விளையாட மீண்டும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

Advertisement