இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவை முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் 21 ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத டிரென்ட் போல்ட் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரென்ட் போல்ட் கூறியதாவது : தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக கோலி போன்ற சிறப்பான பேட்ஸ்மேனை இந்த தொடரில் அவுட்டாகி எனது திறமையை நானே சோதித்துக் கொள்ள விரும்புகிறேன். விராட் கோலி ஒரு மிகச்சிறந்த மனிதர் அது எல்லோருக்கும் தெரியும். மேலும் அவர் இவ்வளவு பெரிய பட்ஸ்மன் என்றும் அனைவருக்கும் தெரியும். போட்டி நடைபெற உள்ள பேசன் பார்க் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது.

எனது காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு ஆறு வாரங்கள் தேவைப்பட்டது. ஆனாலும் கடுமையான பயிற்சிக்கு பிறகு இப்போது மகிழ்ச்சியாக அணிக்கு திரும்பி இருக்கிறேன். இந்தியாவுடனான போட்டியினை சவாலாக நினைத்து கோலி விக்கெட்டை வீழ்த்த ஆவலாக உள்ளேன். எனவே நல்ல ஒரு டெஸ்ட் போட்டியை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று போல்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



