தோல்வியை நோக்கி இந்திய அணி. சொன்னதை செய்து அசத்திய நியூசி வீரர் – விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 46 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாளான இன்று 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

rahane

- Advertisement -

இதன் மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

ரஹானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறலாம். இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடியாத டிரென்ட் போல்ட் 2-வது இன்னிங்சில் தற்போது 19 ரன்கள் எடுத்திருந்த விராட்கோலி அவுட்டாக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் முதல் போட்டி துவங்குவதற்கு முன்பு போல்ட் கூறுகையில் தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். அதிலும் குறிப்பாக விராட் கோலி போன்ற சிறந்த பேட்ஸ்மெனை இந்த தொடரில் அவுட்டாகி எனது திறமையை நான் சோதித்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். எனவே அவர் சொன்னதுபோல தற்போது கோலியின் விக்கெட்டை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement