இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை ஜெயிக்கப்போறது நாங்க தான் – சவால் விட்ட நியூசி வீரர்

Boult

ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சவுதாம்ப்டன் நகரில் மோத இருக்கின்றன. இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsNZ

மேலும் இந்த இறுதிப் போட்டி குறித்து நாள்தோறும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் சில வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் இந்த இறுதிப் போட்டி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணி சொந்த மண்ணிலும் சரி, உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது இம்முறை இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற எங்களுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் வரலாறு படைப்போம் என தான் நம்புவதாகவும் டிரென்ட் போல்ட் கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடர் முடிந்து ஐபிஎல் தொடரிலும் நான் சில ஆட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாட காத்திருக்கிறேன் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Nz vs Eng

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னர் தற்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டி இன்று லண்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement