டி20 போட்டிகளுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விலகும் நியூசி நட்சத்திர வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

Boult
- Advertisement -

21-ஆம் நூற்றாண்டில் உலகின் அனைத்து துறைகளிலும் காலச்சக்கரம் ஏற்படுத்தியுள்ள அபார வளர்ச்சி கிரிக்கெட்டிலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான சர்வதேச போட்டிகளை உருவாக்கியது மட்டுமில்லாமல் அனைத்து முன்னணி நாடுகளிலும் விதவிதமான பிரீமியர் லீக் டி20 தொடர்களை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த போட்டிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு தரமான போட்டிகள் கிடைப்பதுடன் அதை நடத்தும் வாரியங்களும் அதில் விளையாடும் வீரர்களும் முன்பைவிட பொருளாதாரத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளனர். ஆனால் அந்த அத்தனை தொடர்களிலும் விளையாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஒரு கட்டத்தில் பணிச்சுமையால் பாதிக்கப்படுகின்றனர்.

அது அவர்களின் ஆட்டத்தில் எதிரொலிப்பதால் சமீப காலங்களில் நிறைய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பாதிப்புக்குள்ளாவதை பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் சக்கை போடு போட்டு வந்த நிலையில் கேப்டனாகவும் செயல்பட்டதால் ஏற்பட்ட அத்தனை பாரமும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த பிரச்சனையால் சில மாதங்கள் ஓய்வெடுத்து திரும்பிய இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் நிரந்தர தீர்வு காண்பதற்காக ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து 31 வயதிலேயே விடை பெறுவதாக சமீபத்தில் அறிவித்தர்.

- Advertisement -

விலகும் போல்ட்:
அந்த வரிசையில் நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் இணைந்துள்ளார். ஆம் கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் தனது அபார திறமையால் கடந்த 10 வருடங்களாக நியூசிலாந்தின் 3 வகையான அணியிலும் முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அதுபோக ஐபிஎல் உட்பட நிறைய பிரீமியர் லீக் தொடர்களிலும் பங்கேற்று வரும் அவர் சமீப காலங்களில் அதிகப்படியான பணிச்சுமையுடன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று உணர்ந்துள்ளார். அதன் காரணமாக வரும் காலங்களில் உள்ளூர் டி20 தொடர்களில் கவனம் செலுத்துவதற்காகவும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் நியூசிலாந்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து விதிமுறைப்படி மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் அந்த அணி விளையாடும் அனைத்து போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதால் இந்த முடிவை டிரென்ட் போல்ட் எடுத்துள்ளார். அதாவது இதுவரை நியூசிலாந்து விளையாடிய அத்தனை போட்டிகளில் இடம்பெற்றிருந்த டிரென்ட் போல்ட்டை வரும் காலங்களில் அனைத்து போட்டிகளிலும் நம்மால் பார்க்க முடியாது. அவர் விரும்பும் போது மட்டும் நியூசிலாந்துக்காக விளையாடப் போகிறார். இதை நியூசிலாந்து வாரியத்திடம் வெளிப்படையாக தெரிவித்துள்ள அவரின் கோரிக்கையை அந்நாடு வாரியமும் ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இது பற்றி டிரென்ட் போல்ட் அறிவித்துள்ளது பின்வருமாறு. “இது கடினமான முடிவு என்றாலும் இதை ஏற்றுக் கொண்டதற்காக நியூசிலாந்து வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற என்னுடைய சிறுவயது லட்சியத்தில் கடந்த 12 வருடங்களில் நியூசிலாந்துக்காக நான் சாதித்தவற்றால் பெருமை அடைகிறேன். இந்த முடிவை எனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்காக எடுத்துள்ளேன். ஏனெனில் இதுநாள் வரை கிரிக்கெட்டில் நான் உத்வேகத்துடன் விளையாட அவர்கள்தான் எனக்கு பின்புறமிருந்து ஆதரவும் ஊக்கமும் கொடுத்தனர்”

“இப்போதும் நியூசிலாந்துக்காக சர்வதேச அளவில் விளையாட தயாராக இருக்கிறேன். மேலும் இந்த மத்திய ஒப்பந்தம் நியூசிலாந்துக்காக விளையாடும் எனது தேர்வை பாதிக்காது என்று நம்புகிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக குறிப்பிட்ட காலம் மட்டுமே என்னால் ஓட முடியும் என்று உணர்ந்துள்ள நான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார். அவரின் முடிவை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த 2011 முதல் நியூசிலாந்துக்காக அவர் ஆற்றிய பங்கை பாராட்டி அவரின் முடிவை மதிப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பார்ம் காரணமாக டி20 அணியிலிருந்து விராட் கோலியை நீக்கக் கோரிய 6 முன்னாள் இந்திய வீரர்களின் பட்டியல்

இருப்பினும் இனிமேல் நியூசிலாந்து விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ட்ரெண்ட் போல்ட் போன்ற நட்சத்திர தரமான வேகப்பந்து வீச்சாளர் இடம்பெற மாட்டார் என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு அதிர்ச்சிகர செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 169 ஒருநாள் விக்கெட்டுகளையும் 62 டி20 விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அவர் உலக அளவில் தற்சமயத்தில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement