- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவுட்டாக வழியே இல்ல.. இந்தியாவை அடிச்சுகிட்டே இருப்பேன்.. காரணம் இது தான்.. ஹர்பஜனுக்கு ஹெட் பதில்

இந்திய கிரிக்கெட் அணியை கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக அடித்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சதமடித்த அவர் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற வைத்தார். பின்னர் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை சொந்த மண்ணில் நொறுக்கிய அவர் சதமடித்து ஆஸ்திரேலியாவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

அந்த வரிசையில் தற்போது நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 89 ரன்கள் அடித்த அவர் இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். ஆனால் 2வது போட்டியில் சதமடித்த ஹெட் மீண்டும் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கம்பேக் கொடுக்க உதவினார். அதோடு நிற்காத அவர் காபாவில் நடைபெறும் 3வது போட்டியிலும் 152 ரன்கள் விளாசி இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் ஆதங்கம்:

மறுபுறம் 2 வருடமாகியும் அவரை விரைவில் அவுட்டாக்கி வெற்றி காணும் திட்டத்தை உருவாக்க முடியாமல் இந்தியா திண்டாடி வருகிறது. இந்நிலையில் எப்படித்தான் உங்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசுவது? என்று அவரிடம் இந்திய ரசிகர்கள் சார்பில் முன்னாள் வீரர் ஹர்பஜன் கேட்டார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கேட்டது பின்வருமாறு.

“நன்றாக விளையாடினீர்கள். உங்களுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும்? என்பது இந்தியாவில் இருக்கும் அனைத்து ரசிகர்களின் கேள்வியாகும். இந்தியாவுக்கு எதிராக ஏன் நீங்கள் ரன்கள் அடிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி விளையாடுவதால் அவர்களுடைய பவுலர்களின் பலம், பலவீனம் பற்றிய ப்ளூபிரிண்ட் தம்மிடம் இருப்பதாக டிராவிஸ் ஹெட் கூறினார்.

- Advertisement -

இந்தியாவை அடிப்பேன்:

புதிய திட்டங்களை வகுத்தாலும் அதை சமாளிக்க பயிற்சி எடுப்பதால் இந்தியாவை முடிந்தளவு அடித்துக்கொண்டே இருப்பேன் என அவர் கூறியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக நாங்கள் அதிகம் விளையாடுவதால் ப்ளூபிரிண்ட் இருக்கிறது என்று ஏற்கனவே கூறியுள்ளேன். இன்று இந்தியா எனக்கு எதிராக நல்ல திட்டங்களுடன் வந்ததால் கொஞ்சம் அழுத்தத்தை உணர்ந்தேன்”

இதையும் படிங்க: சாரி ஜஸ்பிரித் பும்ராவை அப்படி சொன்னது தப்பு தான்.. இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இஷா

“இருப்பினும் நான் என்னுடைய ஆட்டத்தில் இருந்தேன். அவர்களுக்கு எதிரான ஷார்ட் பிட்ச் பந்து திட்டம் எனக்கு வேலை செய்தததால் மகிழ்ச்சியடைந்தேன். ஜடேஜா எனக்கு எதிராக கொஞ்சம் பவுன்ஸ் வைத்து நன்றாக வீசினார். இருப்பினும் அவருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அதுவும் வேலை செய்ததில் மகிழ்ச்சி. இந்தியாவும் வித்தியாசமான திட்டங்களுடன் வந்தார்கள். ஆனால் அந்த திட்டத்திற்குள் நான் சென்று விளையாட முயற்சித்தேன். அது எனக்கு வேலை செய்தது. மீண்டும் அவர்களை மற்றொரு வாய்ப்பில் அடிப்பதற்காக நான் புத்துணர்ச்சியடைய வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -