வறுமையிலிருந்து வந்த 5 வீரர்கள்…சாதிக்க பணம் ஒரு பொருட்டல்ல…இப்ப அவங்க மதிப்பு என்ன தெரியுமா !…

- Advertisement -

இந்தியாவை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்கிடைத்து விடாதா என்று தினம் தினம் ஏங்கிடும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகமே.இன்றைய சூழலில் இந்திய அணியில் இடம்கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

MSdhoni

- Advertisement -

இன்று நாம் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து கிரிக்கெட் உலகில் சாதித்த ஐந்து வீரர்களைப்பற்றி பார்ப்போம் வாருங்கள்.

1. தோனி.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமான இவர் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி பின்னர் இந்திய அணியின் கேப்டனாக படிப்படியாக உயர்ந்தவர்.இன்று இந்திய அணியில் அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

- Advertisement -

பள்ளி பருவத்திலிருந்தே கிரிக்கெட் மீது அலாதியான பிரியம் கொண்ட இவர் சிறந்த கால்பந்தாட்ட வீரரும் கூட.ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனது திறமையால் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்து இன்று இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

dhoni

2. ரோகித்சர்மா.

- Advertisement -

தற்போது நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை பெற்றுத்தந்தவர்.ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர் தான் இவரும். மகாராஷ்டிராவில் பிறந்த இவரது தந்தை போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ரோகித்சர்மாவின் தந்தை முதலில் தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட அனுப்பியுள்ளார்.

முதலில் ரோகித்சர்மாவிற்கு கிரிக்கெட்டில் சுழற்பந்து வீசுவதில் தான் ஆர்வம் இருந்துள்ளது.இவரது பேட்டிங் திறமையை கண்ட பயிற்சியாளர் தான் பவுலிங்கை விட உனக்கு பேட்டிங் தான் செட் ஆகும் என்று அறிவுரை கூறி பேட்ஸ்மனாக மாற்றியுள்ளார்.இன்று ரோகித்சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக வலம்வருகின்றார்.

- Advertisement -

sharma

3. இர்பான் மற்றும் யூசுப் பதான் சகோதரர்கள்.

மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பதான் சகோதரர்கள் தங்களுக்கென வீடில்லாததால் பரோடாவிலுள்ள ஒரு மசூதியில் குடும்பத்தினரோடு தங்கியவர்கள். அன்று அவர்களது தந்தையின் மாத வருமானமே ரூபாய் 3500 தானாம்.இளம்வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய இர்பான் சகோதரர்கள் தங்களுடைய திறமையால் ஒரே நேரத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து இந்தியாவிற்காக விளையாடியவர்கள்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இர்பான் பதான் ஆல்ரவுண்டராகவும் வலம் வந்தவர். இவரது சகோதரரான யூசுப் பதான் அதிரடி ஆட்டக்காரும் சுழற்பந்து வீச்சாளரும் கூட.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்திய அணியில் இடம்பிடித்து தங்களுடைய திறமைகளை நிரூபித்தவர்கள் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

4. ரவீந்திர ஜடேஜா.

எப்படியாவது கிரிக்கெட் உலகில் தடம்பதித்து வெற்றிகரமான வீரராக வலம் வரவேண்டமென்று சிறுவயது முதலே கனவு கண்ட இவரின் தாய் செவிலியர் மற்றும் தந்தை செக்யூரிட்டியாக பணியாற்றியவர்கள்.

ஏழ்மையான சூழலில் பிறந்திருந்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட் என்று கிரிக்கெட்டின் மீது ஆர்வமாக இருந்தவர்.இவருக்கு 16 வயதிருக்கும் போது ஒரு விபத்தில் தாயை இழந்துவிட்டார். இருப்பினும் தனது விடாமுயற்சியால் இந்திய அணியில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.

jadeja

5. முனாப் பட்டேல்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் 9ம் வகுப்பு படிக்கும் போதே டைல்ஸ் கடையில் வேலைபார்த்தவர். ஒருமுறை தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது இவரது ஆட்டத்தை பார்த்து வியந்த பயிற்சியாளர் ஒருவர் இவரது திறமைகளை வெளிக்கொண்டு வந்தார்.பின்னாட்களில் இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்து தனக்கான தனிமுத்திரையை பதித்து சாதித்தார்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வறுமையிலிருந்து வந்து தங்களது கடுமையான பயிற்சியின் மூலமும், திறமையின் மூலமும் முன்னுக்கு வந்தவர்கள்.எனவே சாதிப்பதற்கு பணமோ வறுமையோ ஒரு பொருட்டில்லை. கடுமையான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயமாக நீங்களும் ஒருநாள் இவர்களைப்போல வரலாம்.

Advertisement