இந்திய அணியில் அதிகம் படித்த 7 வீரர்களின் பட்டியல். ஐ.ஏ.எஸ்-க்கு ட்ரை பண்ணவரு கூட – லிஸ்ட்ல இருக்காரு

Kumble
- Advertisement -

கிரிக்கெட் வீரர்களாக நாம் பெரிதும் கேள்விப்பட்ட பிரபல வீரர்கள் எல்லாம் பெரிதாக கல்வியில் தேர்ச்சி பெற்றது இல்லை. சச்சின், தோனி கங்குலி என எல்லோருமே அடிப்படை கல்வியை மட்டுமே முடித்துள்ளனர். இந்நிலையில் இவர்களை தாண்டி பல வீரர்கள் இன்ஜினியரிங், வணிகம், அஸ்ரோபிசிக்ஸ், ஐஏஎஸ் என பலவற்றை படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் பட்டியலை தற்போது காண்போம். அப்படி இந்திய அணியில் அதிகம் படித்த 7 வீரர்களின் பட்டியலை நாங்கள் இங்கு உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

Ashwin-3

- Advertisement -

ரவிசந்திரன் அஸ்வின் :

இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய வீரராக இருப்பவர். இவர் சென்னையை சேர்ந்தவர். சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், அதன் பின்னர் எஸ்எஸ்என் கல்லூரியில் ஐடி என்ஜினீயரிங் படித்துள்ளார் .அதன்பின்னர் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்சில் ஒரு சில காலம் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்துள்ளார் அஸ்வின்.

Srinath

ஜவகல் ஸ்ரீநாத் :

- Advertisement -

இந்திய அணி உருவாக்கிய மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் இன்ஸ்றுமெண்டேஷன் டெக்னாலஜி படித்து உள்ளார் ஸ்ரீநாத்.

Kumble 1

அனில் கும்ப்ளே :

- Advertisement -

இவரும் கர்நாடகாவை சேர்ந்தவர். முன்னாள் இந்திய கேப்டனாக இருந்தவர். தற்போது ஐசிசி உருவாக்கியுள்ள விதிகளுக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவராக இருப்பவர். இவர் கர்நாடகாவில் உள்ள சாஸ்திரிய வித்யாலயா காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

RAHUL DRAVID

ராகுல் டிராவிட் :

- Advertisement -

இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் இவர், தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார். இந்திய அணிக்காக அறிமுகமாகும்போது இவர் எம்பிஏ முடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SRIKKANTH

ஸ்ரீகாந்த் :

முன்னாள் இந்திய கேப்டனும் தமிழக வீரருமான இவர் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்து இருந்தார். அதுவும் கிண்டியில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் இவர் படித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

,murali vijay

முரளி விஜய் :

இவர் சற்று வித்தியாசமானவர். வழக்கமாக அனைவரும் தேர்வு செய்யும் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யாமல் வணிகத்தில் அண்டர் கிராஜுவேட் டிகிரியும், பிலாசபியில் மாஸ்டர்ஸ் டிகிரி பெற்றிருக்கிறார் முரளிவிஜய்.

Amay-khurasiya

அமெய் குரசியா :

இவர் இந்திய அணி வீரர்களிடையே எவரும் செய்யாததை செய்திருக்கிறார். இந்திய அணிக்காக தேர்வாகும் முன்னர் இந்தியாவின் மிகச்சிறந்த கடினமான தேர்வு என அழைக்கப்படும் இந்திய ஆட்சித்துறை பணிகளுக்கான யூபிஎஸ்சி தேர்வை பாஸ் செய்திருந்தார். அதன் பின்னர் ஐஏஎஸ் கனவை உதறிவிட்டு தனது உண்மையான கனவான கிரிக்கெட் பக்கம் திரும்பி விட்டார்.

Advertisement