- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக டாட் பந்துகளை எதிர்கொண்ட டாப் 7 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் எதிரணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் அதை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை சேர்ப்பதே பேட்ஸ்மேன்களின் கடமையாகும். அப்படி அதிரடியாக ரன்கள் எடுப்பதற்கு முன்பாக ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் மைதானம் எப்படி உள்ளது, பந்து வீச்சாளர்கள் எப்படி வீசுகின்றனர் என்பதை கணிக்க ஆரம்பத்தில் ஒருசில பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் தங்களது ஆட்டத்தை தொடங்குவார்கள். அதிலும் பெரும்பாலான தருணங்களில் குறைந்தது 10க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்த பின்பு தான் தங்களது அதிரடியை தொடங்குவார்கள். ஆனால் அதற்குப் பின் அவர்கள் அதிரடியை காட்டாமல் அவுட்டாகி விட்டால் அதுவே பெரிய பின்னடைவையும் ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில் டி20 போட்டிகளில் ஒருவேளை ஒரு பேட்ஸ்மென் அதிரடியாக விளையாடவில்லை என்றாலும் குறைந்தது சிங்கிள், டபுள் போன்ற ரன்களை எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் தாமும் அழுத்தமடைந்து எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மெனும் அழுத்தமடைந்து அவுட்டாக சூழ்நிலை ஏற்பட்டு இறுதியில் தோல்வியை பரிசளித்து விடும். அப்படிப்பட்ட நிலைமையில் டி20 போட்டிகளில் டாட் பந்துகள் அதாவது ரன் எதுவும் எடுக்காத பந்துகளை அதிகம் எதிர்கொள்வது ஒரு பேட்ஸ்மேனை பொருத்தவரை அவமானமாகும்.

- Advertisement -

ஆனால் ஒருசில பேட்ஸ்மேன்கள் ஒரு சீசனில் அதிக போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன்களை குவித்தாலும் அதிக டாட் பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தாலும் அதற்கேற்ப அவர்கள் ரன்களையும் குவித்து அதை ஈடு செய்திருப்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக டாட் பந்துகளை எதிர்கொண்ட டாப் 6 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

7. சச்சின் டெண்டுல்கர் 194: இந்தியா கண்ட மகத்தான பேட்ஸ்மேனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் இளம் வயதில் ஐபிஎல் வந்திருந்தால் நிச்சயம் 10000 ரன்களை அடித்திருப்பார். இருப்பினும் கூட 2008 – 2013 வரை ஐபிஎல் தொடரில் 78 போட்டிகளில் 2334 ரன்களை எடுத்து அவர் வரலாற்றில் 35 வயதுக்கு மேல் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் கடந்த 2011 சீசனில் 16 போட்டிகளில் பங்கேற்று 1 சதம் 2 அரைசதம் உட்பட 553 ரன்களை 42.53 என்ற சிறப்பான சராசரியில் எடுத்தார். இருப்பினும் அந்த வருடம் அவர் எதிர்கொண்ட 488 சந்துகளில் 194 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காததே அவரின் ஸ்ட்ரைக் ரேட் 113.31 என சரிய முக்கிய காரணமாக இருந்தது.

6. சௌரவ் கங்குலி 195: இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்நாளின் கடைசி நேரத்தில்தான் ஐபிஎல் வந்தது. அவர் கொல்கத்தா, புனே போன்ற அணிகளுக்காக மொத்தம் 59 போட்டிகளில் 1349 ரன்களை எடுத்துள்ளார்.

- Advertisement -

அதில் 2010 சீசனில் கொல்கத்தாவுக்கு விளையாடிய அவர் 4 அரை சதங்கள் உட்பட 493 ரன்களை விளாசினார். அந்த வருடம் 195 டாட் பந்துகளை எதிர்கொண்ட அவர் இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிப்பதுடன் அதன் காரணமாக அந்த சீசனில் 117 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை எடுத்தார்.

5. ஜேக் காலிஸ் 196: உலகின் மகத்தான ஆல்-ரவுண்டராக கருதப்படும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஐபிஎல் தொடரிலும் 98 போட்டிகளில் 2427 ரன்களையும் 65 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

அதிலும் 2010 சீசனில் 16 போட்டிகளில் 6 அரை சதங்கள் உட்பட 572 ரன்களை 47.66 என்ற சராசரியில் எடுத்த அவர் 196 டாட் பந்துகளையும் எதிர்கொண்டு இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார். அதன் காரணமாக அந்த சீசனில் அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 115.78 என சுமாராகவே இருந்தது.

4. ராகுல் டிராவிட் 200: பொறுமையின் சிகரமாக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடி தன்னால் டி20 போட்டிகளிலும் விளையாட முடியும் என நிரூபித்தவர்.

மொத்தம் 89 போட்டிகளில் 2174 ரன்களை எடுத்து அசத்திய அவர் தனது கடைசி ஐபிஎல் தொடரான 2013 சீசனில் 18 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 471 ரன்களை எடுத்தார். அதிலும் 425 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதில் 200 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

3. லெண்டில் சிமன்ஸ் 201: வெஸ்ட் இண்டீஸ் காட்டடி வீரர்களில் ஒருவரான இவர் கடந்த 2015 சீசனில் 13 போட்டிகளில் 441 பந்துகளை சந்தித்து 540 ரன்கள் எடுத்தார். இருப்பினும் 201 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடிக்கும் அவர் அவர் அந்த வருடம் 122.44 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே ரன்களை குவித்தார்.

2. மைக் ஹசி 203: ஆஸ்திரேலியாவின் மிஸ்டர் கிரிக்கெட் எனப்படும் மைக் ஹசி சென்னை அணிக்காக 59 போட்டிகளில் 1977 ரன்களைக் குவித்து அசத்தியவர்.

அதிலும் 2013 சீசனில் அவர் எதிர்கொண்ட 566 பந்துகளில் 203 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் இந்த பட்டியலில் 2-வது இடம் பிடித்தாலும் எஞ்சிய பந்துகளில் அதிரடியாக பேட்டிங் செய்து மொத்தம் பங்கேற்ற 17 போட்டிகளில் 6 அரை சதங்கள் உட்பட 733 ரன்களை விளாசி அந்த வருட ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

1. ஜோஸ் பட்லர் 217 : ஐபிஎல் 2022 தொடரில் இங்கிலாந்தின் நட்சத்திரம் ஜோஸ் பட்லர் ரன் மெஷினாக ரன் மழை பொழிந்த போதிலும் அவர் விளையாடிய ராஜஸ்தான் கோப்பையை வாங்க முடியவில்லை. இந்த வருடம் மொத்தம் பங்கேற்ற 17 போட்டிகளில் 4 அரைசதங்கள் 4 சதங்கள் உட்பட 863 ரன்களை 57.53 என்ற அற்புதமான சராசரியில் விளாசிய அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார்.

இந்த வருடம் அவர் எதிர்கொண்ட 579 பந்துகளில் 217 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் இந்த பட்டியலிலேயே அதிகபட்சமாக 149.05 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து ஆச்சரிய படுத்துகிறார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக டாட் பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

- Advertisement -
Published by