ஐபிஎல் வரலாற்றில் சவாலான பிளே ஆஃப் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த டாப் 6 பவுலர்கள்

Bravo
- Advertisement -

ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் தொடர்களில் பெரும்பாலான போட்டிகளில் தங்களது அணிகளுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்காக ரன் மழை பொழிய துடிக்கும் பேட்ஸ்மேன்கள் பவுலர்களுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்வது வழக்கமான ஒன்றாகும். அதன் காரணமாகவே சாதாரண லீக் போட்டிகளில் கூட பவுலர்களின் நிலைமை படாத பாடாக உள்ளது. ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் கூட இந்த தொடரில் நிலவும் அதிகப்படியான அழுத்தத்தால் பல தருணங்களில் தடுமாறி எதிரணிகளுக்கு ரன்களை வாரி வழங்கியதோடு வெற்றியையும் பரிசளிப்பதை பார்க்கிறோம். மொத்தத்தில் டி20 போட்டிகளில் பவுலர்களின் நிலைமை எப்போதுமே கத்திமேல் நடப்பது போன்றதாகும்.

Jasprith Bumrah

- Advertisement -

அப்படிப்பட்ட நிலைமையில் பிளே ஆப் போட்டிகளில் கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பது பவுலர்களுக்கு கடினமாகவே இருக்கும். ஏனெனில் நாக் அவுட் போட்டிகளில் கொஞ்சம் சொதப்பினாலும் தனது அணி தோல்வியடைந்து வெளியேறி விடும் என்ற இயற்கையான பதற்றத்தால் சிறப்பான பவுலர்கள் கூட சற்று தடுமாறுவார்கள். ஆனாலும் அவர்களுக்குள்ள பதற்றத்தை போலவே பேட்ஸ்மேன்களும் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கப்போய் கேட்ச் கொடுத்து அவுட்டானால் பெரிய ரன்கள் அடிக்க முடியாமல் தங்களது அணி தோல்வியடைந்து விடுமோ என்ற பதட்டத்தில் விளையாடுவார்கள்.

பேட்ஸ்மேன்களின் அந்த ஒரே ஒரு வீக்னெசை பயன்படுத்தி தரமாக பந்து வீசினால் கண்டிப்பாக எவ்வளவு அதிரடியான பேட்ஸ்மேனையும் எளிதாக சாய்த்து விடலாம். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் போட்டிகளில் பதற்றம் அடையாமல் எதிரணி பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை பயன்படுத்தி தைரியமாகவும் தரமாகவும் பந்துவீசி அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 6 பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

Morkel 1

6. அல்பி மோர்கெல்: சென்னை அணிக்காக ஆரம்பகட்ட ஐபிஎல் வருடங்களில் ஆல் ரவுண்டராக அசத்திய அல்பி மோர்கல் 2010, 2011 ஆகிய வருடங்களில் அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அந்த கால கட்டங்களில் விளையாடிய போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

5. லசித் மலிங்கா: இலங்கையின் யார்க்கர் கிங் லசித் மலிங்கா தனது வித்தியாசமான பந்துவீச்சால் உலக கிரிக்கெட்டை மிரட்டியது போலவே ஐபிஎல் தொடரிலும் அபாரமாக பந்துவீசி மும்பைக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்தவர்.

Malinga

குறிப்பாக சென்னைக்கு 2019 பைனலில் கடைசி பந்தில் விக்கெட் எடுத்த அவர் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் 15 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்களை 7.48 என்ற எக்கனாமியில் எடுத்து இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. ரவீந்திர ஜடேஜா: 2008இல் ராஜஸ்தானில் தொடங்கி இப்போது சென்னை வரை ஐபிஎல் தொடரில் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வரும் ரவீந்திர ஜடேஜா 2008, 2018, 2021 ஆகிய வருடங்களில் 3 சாம்பியன் பட்டங்களை வென்றவர்.

jadeja 2

இவர் 21 பிளே ஆஃப் போட்டிகளில் பங்கேற்று 16 விக்கெட்டுகளை 7.88 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்த இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. ஹர்பஜன் சிங்: வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்துள்ள மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளில் முக்கிய பவுலராக விளையாடிய முன்னாள் இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 15 பிளே ஆப் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 7.27 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

Ashwin

2. ரவிச்சந்திரன் அஷ்வின்: தமிழகத்தின் ஸ்டார் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆரம்பத்தில் சென்னையில் தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கி அதன்பின் பஞ்சாப், டெல்லி அணிகளை கடந்து ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.

இருப்பினும் சென்னை, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக 19 ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை 7.15 என்ற எக்கனாமியில் எடுத்து இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

Bravo

1. ட்வயன் ப்ராவோ: மும்பையில் தொடங்கி சென்னை அணியில் பெரும்பாலான வருடங்களில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் டுவைன் பிராவோ பொதுவாகவே அழுத்தம் நிறைந்த கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவர்.

அப்படிப்பட்ட அவருக்கு நாக் அவுட் போட்டிகளும் சர்வ சாதாரணம் என்ற நிலையில் 19 பிளே ஆஃப் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை 8.21 என்ற எக்கனாமியில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர பவுலர்களை காட்டிலும் 13.80 என்ற மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

Advertisement