இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ள முகம் தெரியாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Top-5

இந்திய அணி கடந்த 1932ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறது தற்போது வரை கிட்டத்தட்ட குறைந்தது 1000 வீரர்களாவது விளையாடி இருப்பார்கள். அதில் கைவிட்டு எண்ணக்கூடிய அளவிலான வீரர்களின் பெயர்கள் மட்டும்மே நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்தியாவிற்காக இந்த வீரர்கள் கூட விளையாடி உள்ளார்களா, என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் 5 வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்ப்போம்.

Rishi

ரிஷி தவான் :

- Advertisement -

இவர் இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர். தோனியின் காலகட்டத்தில் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் வேண்டும் என்ற நேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தவர். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். மேலும் ரன்களும் ஓரளவிற்கு அடித்திருந்தார் இதன் காரணமாக அடுத்த வருடமே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இவர் அறிமுகமான மொத்தம் மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இவர் ஆடியிருக்கிறார்.

Fazal

பைஸ் பைசல் :

- Advertisement -

இவர் நாக்பூரை சேர்ந்தவர். தற்போது விதர்பா அணிக்காக ஆடி வருகிறார். முதல்தர போட்டிகளில் சிறப்பாக ஆடும் இடதுகை வீரர் ஆவார். பேட்டிங்கில் அசத்தியதன் காரணமாக 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்காக விளையாட தேர்வானார். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் ஆடி அரை சதம் விளாசியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

குர்கீரத் சிங் மான் :

இவர் பஞ்சாபை சேர்ந்தவர். இந்தியா உருவாக்கிய எண்ணிலடங்கா சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் இவரும் ஒருவர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும் இவரால் விளையாட முடியும். உள்ளூர் போட்டிகளிலும் இந்திய ஏ அணிக்காகவும் நன்றாக விளையாடியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் தேர்வானார். ஒருநாள் போட்டிகளில் 3 முறை மட்டுமே இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.

Tyagi 2

சுதீப் தியாகி :

இவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2007ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடரில் 41 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். மேலும் 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தேர்வாகி ஒரே ஒரு போட்டியில் விளையாடினார். மொத்தம் நான்கு ஒருநாள் போட்டியிலும் ஒரு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

pankaj

பங்கஜ் சிங் :

இந்திய அணி 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது உயரமான பந்துவீச்சாளர் தேவை என்பதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார். உள்ளூர் போட்டிகளிலும் 117 போட்டிகளில் விளையாடி 472 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்காவே 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இஷாந்த் ஷர்மா மற்றும் பங்காஜ் சிங் ஆகியோர்தான் 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 2007ம் ஆண்டு தேர்வானார்கள். ஆனால், இவரால் தனது திறமையை நிரூபிக்க முடியவில்லை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இவர் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார்.

Advertisement