ஐ.பி.எல் தொடரில் அசாத்தியமான திறமைகளை வெளிகாட்டியும் நம்மால் மறக்கப்பட்ட 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

players
- Advertisement -

ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கான ஒரு வாய்ப்பாக இருக்கிறது. நாம் கேள்விப்படாத பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் தான் நன்றாக விளையாடி இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளனர். அப்படி ஐபிஎல் தொடரில் ஜொலித்த ஆனால் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைக்காமல் போன 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

valthaty

- Advertisement -

பால் வல்தாட்டி (2011சீசன் ) :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2011ம் ஆண்டு ஆடினார். அந்த தொடரில் மட்டும் 463 ரன்கள் குவித்து இருந்தார் இவர். அதன்பின்னர் 2013ம் ஆண்டு இவருக்கு காயம் ஏற்பட்டு கிரிக்கெட் ஆட முடியாமல் போனது.

Bisla

மன்வீந்தர் சிங் பிஸ்லா (2012 சீசன்) :

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 48 பந்துகளில் 83 ரன்கள் அடித்து கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2015 ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆடியவர். அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

Asnodkar

ஸ்வப்னில் அஸ்னோட்கர் (2008 சீசன்) :

- Advertisement -

2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் இவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் அந்த தொடரில் மட்டும் 7 போட்டிகளில் ஆடி 418 ரன்கள் விளாசி இருந்தார் .அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் அதன் பின்னர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் நன்றாக ஆட முடியாத காரணத்தால் வெளியேறினார்.

Saurabh Tiwary

சவுரப் திவாரி (2010சீசன்) :

- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். தோனியை போன்றே இருப்பார்.இடதுகை அதிரடி பேட்ஸ்மேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2010ஆம் ஆண்டு விளையாடி 16 போட்டிகளில் 419 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணிக்கு ஆகவும் ஒரு சில போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

Rahul

ராகுல் சர்மா (2011சீசன்) :

2011ம் ஆண்டு பூனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் இவர். அந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இந்திய அணிக்கு ஆகவும் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 2 டி20 போட்டிகளில் ஆடி தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியாத அளவிற்கு போய்விட்டார்.

Advertisement