ஐசிசி டி20 உ.கோ வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்துள்ள டாப் 5 அணிகளின் பட்டியல்

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் பவுலர்களுக்கு கருணை காட்ட நினைக்காத பேட்ஸ்மேன்கள் அதிரடி சரவெடியான பவுண்டரிகளை பறக்க விட்டு ரசிகர்களையும் மகிழ்வித்து 200 ரன்களை குவித்து தங்களது அணிக்கு வெற்றி பெற வைக்கும் எண்ணத்துடன் களமிறங்குவார்கள். அதிலும் மைதானம் கொஞ்சம் பந்து வீச்சுக்கு சாதகமாக அல்லாமல் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தால் போதும் நம்ம சின்ன ராசை கையிலேயே பிடிக்க முடியாது என்ற வகையில் எதிரணி பவுலர்களை பிரித்து மேய்ந்து விடுவார்கள்.

அத்துடன் பிட்ச் தரமாக இருந்து எதிரணி பவுலர்கள் சுமாராக பந்து வீசினால் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விக்கெட்டுகள் கிடைக்காமல் போவதுடன் அதற்கு தண்டனையாக கண்கலங்கும் அளவுக்கு முரட்டு அடி வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் எதிரணி பவுலர்களைப் பந்தாடி அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த டாப் 5 அணிகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. தென்ஆப்பிரிக்கா 211/5: கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 5வது போட்டியில் ஏபிடி வில்லியர்ஸ் 79* (34), ஜேக் காலிஸ் 48 (31) கிரேம் ஸ்மித் 38 (29) என களமிறங்கிய அத்தனை பேட்ஸ்மென்களும் ஸ்காட்லாந்து பவுலர்களைப் பந்தாடியதால் தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 211/5 சேர்த்தது. அதனால் ஏற்கனவே பாதி உடைந்த ஸ்காட்லாந்து பேட்டிங்கில் 15.4 ஓவரில் 81 ரன்களுக்கு சுருண்டதால் தென்னாபிரிக்கா 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

4. இந்தியா 218/4: கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் டர்பன் நகரில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியாவுக்கு கௌதம் கம்பீர் 58 (41) வீரேந்திர சேவாக் 68 (52) என தொடக்க வீரர்கள் அதிரடியான அடித்தளம் அமைத்தனர்.

- Advertisement -

அதை சிந்தாமல் சிதறாமல் கடைசி நேரத்தில் களமிறங்கிய யுவராஜ் சிங் வம்பிழுத்த ஆண்ட்ரூ பிளின்டாஃப்புக்கு பதிலடியாக சிக்கிய ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய 19வது ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 12 பந்தில் அரை சதமடித்து 2 உலக சாதனைகளை படைத்து பினிஷிங் கொடுத்தார். அதனால் உலகக்கோப்பையில் தன்னுடைய அதிகபட்ச கோரை பதிவு செய்து சாதனை படைத்து இந்தியா எடுத்த 218/4 ரன்களை துரத்திய இங்கிலாந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

3. தென்ஆப்பிரிக்கா 229/4: கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி 229/4 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

ஹாசிம் அம்லா 58 (31) டீ காக் 52 (24) ஜேபி டுமினி 54* (28) டேவிட் மில்லர் 28* (12) என அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்து டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைக்க வைத்தனர்.

2. இங்கிலாந்து 230/8: ஆனால் அதே போட்டியில் 230 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜேசன் ராய் 43 (16) ரன்களை விளாசி கொடுத்த தொடக்கத்தை மிடில் ஆர்டரில் பயன்படுத்திய ஜோ ரூட் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 83 (43) ரன்கள் குவித்து அசால்டாக சேசிங் செய்ய வைத்தார். அதனால் 19.4 ஓவரில் 230/8 ரன்களை குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து டி20 உலக கோப்பையில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வரலாறு படைத்தது.

1. இலங்கை 260/6: கடந்த 2007இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 7வது கிரிக்கெட் போட்டியில் வசமாக சிக்கிய கத்துக்குட்டி கென்யாவை கதறகதற அடித்த இலங்கை 20 ஓவர்களில் 260/6 ரன்கள் குவித்து டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து உலக சாதனை படைத்தது.

15 வருடங்களா3கியும் உடைக்க முடியாத அளவுக்கு சனாத் ஜெயசூர்யா 88 (43), ஜெயவர்த்தனே 65 (27) ஜெகன் முபாரக் 46* (13) என முக்கிய ரன்களை பெரிய ரன்களை எடுத்த அந்த அணி இறுதியில் 172 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

Advertisement