இந்திய அணியின் கேப்டனாக டாசில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் யார் தெரியுமா ? – 4 பேர் லிஸ்ட் இதோ

Toss
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் மைதானத்தின் தன்மை, சூழ்நிலை ஆகியவற்றை முன்கூட்டியே கணித்து விடுவதால், முதலில் பேட்டிங் ஆடுவது சரியாக இருக்குமா ? அல்லது பந்து வீச்சு சரியானதாக இருக்குமா ? என்ற முன்னேற்படாடுடன்தான் அனைத்து கேப்டன்களும் இருப்பார்கள். எனவே டாஸ் வெற்றிப் பெற்ற கேப்டன் போட்டிக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என்பதால் கிரிக்கெட் விளையாட்டுக்கு டாஸ் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பதிவில் இந்திய அணியின் நான்கு கேப்டன்கள் டாஸ் வெற்றி பெறுவதில் எந்த அளவிற்கு அதிர்ஷ்டமானவர்களாக இருந்தார்கள் என்று நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

dhoni toss

- Advertisement -

மஹேந்திரசிங் தோனி:

இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டனாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த தோனி, டாஸ் விடயத்தில் பல முறை தோற்றுத்தான் போயிருக்கிறார். இவருடைய டாஸ் வெற்றி பெறும் சதவீதம் 47.59 ஆக இருக்கிறது. 158 முறை டாஸ் வெற்றி பெற்றிருக்கும் தோணி, 174 முறை அதில் தோல்வி பெற்றிருக்கிறார்.

ganguly toss

சவுரவ் கங்குலி:

- Advertisement -

2000ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை கட்டமைத்ததில் மிக முக்கிய பங்கு வகித்த கங்குலி, இந்திய அணியை 195 போட்டிகளில் வழிநடத்தி சென்றிருக்கிறார். 100 போட்டிகளில் டாஸ் தோற்றிருக்கும் அவர் 95 போட்டிகளில் அதில் வெற்றி பெற்றிருக்கிறார். டாஸ் வெற்றி பெறுவதில் இவருடைய சதவீதம் 48.1 ஆக இருக்கிறது.

dravid

ராகுல் டிராவிட்:

- Advertisement -

டாஸ் வெற்றி பெறுவதில் இந்திய அணி கேப்டன்களில் அதிக அதிர்ஷ்டம் வாய்ந்தவராக இருக்கும் ராகுல் டிராவிட், 104 பேட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்று, அதில் 61 முறை டாஸை வென்றிருக்கிறார். 43 போட்டிகளில் மட்டுமே டாஸில் தோற்றிருக்கும் ட்ராவிட்டின் சதவீதம் 58.65 ஆகும்.

kohli toss

விராட் கோஹ்லி:

இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லி 240 போட்டிகளில் 85 முறை மட்டுமே டாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். டாஸ் விடயத்தில் மட்டும் இவருக்கு எப்போதும் அதிர்ஷ்டம் இருந்தது இல்லை. இவருடைய டாஸ் வெற்றி பெறும் சதவீதம் 35 ஆகவும், டாஸ் தோல்வி பெறும் சதவீதம் 65 ஆகவும் இருக்கிறது.

Advertisement