- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் கவனம் ஈர்த்த 5 இளம் வீரர்கள் – சுவாரசிய தகவல் இதோ

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஐந்து இளம் இந்திய வீரர்கள் குறித்து யாரும் அறியாத தகவல் இதோ.

தங்கராசு நடராஜன் :

- Advertisement -

நடராஜன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு நெசவாளி ஆவார். நடராஜன் தனது கடுமையான உழைப்பால் மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டு இருக்கும் போது நடராஜனுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் நடராஜன் பயோ பபுளில் இருந்ததால் அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்று இந்திய அணிக்காக விளையாடினார்.

ஷர்துல் தாக்கூர் :

- Advertisement -

ஷர்துல் தாக்கூர் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். பயிற்சிக்காகவே தினமும் லோக்கல் ட்ரைனில் 100 கிலோமீட்டர் வரை பயணித்து தனது கிரிக்கெட் கணவை அடைவதற்கு பல்வேறு போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். இதன்பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடினார். தற்போது இந்திய அணியிலும் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

வாஷிங்டன் சுந்தர் :

- Advertisement -

வாஷிங்டன் சுந்தரின் தந்தை கிரிக்கெட் வீரர் ஆவார். வாஷிங்டன் சுந்தரின் தந்தை சுந்தர் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு வாஷிங்டன் என்ற நண்பர் பொருளாதாரரீதியாக உதவி செய்துள்ளார். தனக்கு உதவி செய்த நண்பரின் பெயரைத்தான் தன்னுடைய மகனுக்கு வைத்திருக்கிறார் சுந்தர்.

நவ்தீப் சைனி :

- Advertisement -

நவ்தீப் சைனியின் தந்தை ஒரு அரசு டிரைவர் ஆவார். நவ்தீப் சைனியிடம் போதுமான பண வசதி இல்லாததால் அவர் பல்வேறு டோர்னமெண்ட்களில் விளையாடி பணம் சேர்த்தார். அந்த பணத்தின் மூலம் அவர் தனது கிரிக்கெட்டுக்கு தேவையான செலவை மேற்கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

முகமது சிராஜ் :

முகமது சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர் ஆவார். இவர் இந்திய அணிக்காக விளையாட ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார். ஆனால் சிராஜ் தனது தந்தையின் இறுதி அஞ்சலிக்கு கூட செல்லாமல் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்திய அணியில் விளையாடி இந்த தொடரில் 3 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -
Published by