தோனியை பற்றி நீங்கள் பலரும் அறிந்திடாத 5 மறைக்கப்பட்ட 5 கருப்பு பக்கங்கள் – லிஸ்ட் இதோ

Dhoni
- Advertisement -

கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதன்படி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை அதிகமாக வென்றவராக திகழ்பவர் தான் மகேந்திர சிங் தோனி. என்னதான் இந்தியாவின் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களாக பலர் இருந்து வந்தாளும், அவர்களும் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை நாம் எல்லோரும் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அதேபோல மகேந்திர சிங் தோனியும் தனது வாழ்க்கையில், சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். அது பற்றிய பதிவை நாங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

goat

- Advertisement -

வெற்றிக்குப் பின் ஆட்டை பலியிட்டது:

2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக் கோப்பையில், இந்திய அணியை தலைமை தாங்கி சென்று கோப்பையை கைப்பற்றிய மகேந்திர சிங் தோனிக்கு, அதே ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரையும் மகேந்திர சிங் தோணி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்த தோனி, அங்குள்ள கோவில் ஒன்றில் வெற்றிக்கு ஈடாக ஆடு ஒன்றை பலியிட்டார். இது அப்போது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் தோனிக்கு கண்டனங்கள் பறந்து வந்தன. இதனையடுத்து இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று தோனி கூறியதால் அப்பிரச்சனை அதோடு அடங்கிபோனது.

glove

கீப்பிங் கிளவ் சர்ச்சை:

- Advertisement -

இந்த சர்ச்சையும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் போதுதான் ஏற்பட்டது. அத் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின்போது கீப்பிங் செய்த தோணி, வித்தியாசமான கீப்பிங் கிளவ் ஒன்றை பயன்படுத்தினார். அதில் பந்து கையை விட்டு நழுவாமல் இருக்க ஆள்காட்டி விரலின் பகுதியும், நடுவிரலின் பகுதியும் ஒன்றாக இணைத்து தைக்கப்பட்டிருந்தது. ஐசிசி விதிமுறையின்படி இது நடத்தை விதிமுறை மீறல் என்பதால், அவருக்கு எச்சரிக்கை மட்டும் விடப்பட்டது. மேலும் அதுபோல் செய்தால் அபாரதத் தொகையும் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது ஐசிசி.

Dhoni

2013 ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை:

- Advertisement -

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோணி சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அந்த வழக்கை விசாரித்த எஸ்.பி.குமார், கிட்டி என்ற சூதாட்ட புரோக்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகியான குருநாத் மெய்யப்பன் தன்னிடம், மகேந்திர சிங் தோனி ஒரு போட்டியில் 140 ரன்களுக்கு கீழ் அடிப்பதாக சம்மதம் தெரிவிததிருக்கிறார் என்று கூறியதாக வாக்கு மூலம் அளித்தான். ஆனால் அதைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்த எஸ்.பி.குமார் ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். பிறகு அந்த வழக்கும் அப்படியே மறக்கடிக்கப்பட்டது.

Srinivasan-1

தோனி மற்றும் சீனிவாசணின் தொடர்பு:

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏலத்தில் எடுத்திருக்கும் இந்தியா சிமெண்டஸ் கம்பெனியின் ஓனர் தான் சீனிவாசன். இவருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் இடையே மிக நெருக்கமான உறவு பல காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக சீனிவாசன் இந்திய கிரிக்கெட் அணியின் சேர்மேன் பதவியில் இருந்தபோது, தோனியின் கேப்டன் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருந்தது. ஆனால் அதை சீனிவாசன் தன் அதிகாரத்தின் மூலம் தடுத்து விட்டார் என சர்ச்சை கிளம்பியது. இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி சிலர், தோனி மிக புத்திசாலி, தேவையான நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களை பயன்படுத்தி தனது பதிவியை தக்க வைத்துக்கொள்வார் என கருத்துக் கூறியிருந்தனர். இவர்களுக்கு இடைப்பட்ட உறவைப் பற்றி ராஜ்தீப் சர்தேசாய், தனது டெமோகிரசி 11 என்ற புத்தகத்தில் பகுப்பாய்வு செய்துள்ளார்.

Sakshi

பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு:

மகேந்திர சிங் தோணி தன் மனைவியான சாக்‌ஷியை திருமணம் செய்து கொள்வதற்கு முன், சில பாலிவுட் நடிகைகளுடன் டேட்டிங் சென்று இருக்கிறார். அப்போது அந்த விஷயம் பத்திரிக்கைகளில் செய்தியாக வலம் வந்தது. குறிப்பாக தீபிகா படுகோனுடன் 2007 ஆம் ஆண்டிலும், பிறகு 2009 ஆம் ஆண்டு ராய் லட்சுமி ஆகியோருடனும் காதலில் இருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். மேலும் அதற்குப் பிறகான நாட்களில், 33 வயதான மற்றொரு பாலிவுட் நடிகையான ப்ரீத்தி சிமோஸுடனும் ரகசிய தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து சர்சையை கிளப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement