- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் வரலாற்றில் டேவிட் வார்னர் படைத்த அசத்தலான 5 சாதனைகள் – ரெக்கார்ட் லிஸ்ட் இதோ

டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் 2009ம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். இவர் ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிக்காக விளையாடியிருக்கிறார். குறைந்த போட்டிகளில் விளையாடி இருந்தாலும் மற்ற வீரர்களை காட்டிலும் அதிகபட்சமாக ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது இவர் ஆடிய அசாதாரண ஆட்டங்கள் பற்றி பார்ப்போம்.

கேப்டனாக அதிகபட்ச ரன் – 126 :

- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கேப்டனாக இருந்த டேவிட் வார்னர். வெறும் 59 பந்துகளில் 126 ரன்கள் குவித்து இருந்தார். இந்த போட்டியில் இவரது ஆட்டத்தின் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரே ஆடுகளத்தில் அதிகபட்ச சராசரி – 64.94 :

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை மைதானமாக ராஜீவ்காந்தி சர்வதேச மைதானம் டேவிட் வார்னர் மிகவும் பிடிக்கும். அந்த மைதானத்தில் மட்டும் வெறும் 24 போட்டிகளில் ஆடி 1169 ரன்கள் குவித்துள்ளார் இதன் சராசரி 60.94 ஆகும். மேலும் அந்த மைதானத்தில் 162.36 ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

ஆரஞ்சு கேப் : :

- Advertisement -

கிறிஸ் கெய்லுக்குப் பிறகு இரண்டு முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரே வீரர்
இவர்தான். டேவிட் வார்னர் 2015ஆம் ஆண்டு 641 ரன்கள் அடித்தும், 2017 ஆம் ஆண்டு 562 ரன்கள் அடித்தும் ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம் :

- Advertisement -

ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் அதிக அரை சதங்கள் அடித்து இருக்கிறார். மொத்தம் 126 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 3 சதங்கள் மற்றும் 39 அரை சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வீரராக அதிக ரன்கள் :

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வீரரான இவர் வெளிநாட்டு வீரராக ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக திகழ்கிறார். இவர் மொத்தம் 115 இன்னிங்ஸ்களில் 4014 ரன்களை குவித்துளார். இதில் 401 பவுண்டரிகளும், 160 சிக்ஸர்களும் அடங்கும்.

- Advertisement -
Published by