ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதையடுத்து ஆக்ரோஷத்துடன் விளையாடிய இந்திய அணி டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணி விளையாடி 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் பந்து வீச்சும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இதையடுத்து ஹார்திக் பாண்டியாவின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி தனது பலத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டும் எடுத்து படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்குபற்ற 5 வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தகுதியான 5 வீரர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
ஷிகர் தவான் :
இவர் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஆவார். இவர் ஒருநாள் தொடரில் 74,30,16 என மொத்தம் 130 ரன்களை குவித்துள்ளார். இதைத்தொடர்ந்து டி20 தொடரில்1, 52, 28 என மொத்தம் 81 ரன்களை குவித்துள்ளார். சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஷிகர் தவானை இந்திய அணி பேக்கப் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் :
இவர் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2, 38, 19 ரன்களும் டி20 தொடரில் 0, 12,0 ரன்களும் பெற்றுள்ளார். இருப்பினும், இவரையும் இந்திய அணி டெஸ்ட் போட்டிக்காக தக்கவைத்துள்ளது.
ஹர்திக் பாண்டியா :
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கருதப்படும் ஹர்திக் பாண்டியா ஒரு வருடமாக காயம் காரணமாக காரணத்தினால் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். தற்போது இவர் மீண்டும் ஐபிஎல் தொடரின் மூலம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய எதிரான ஒருநாள் தொடரில் 90,28,92 ரன்களும் டி20 தொடரில் 16,42,20 ரன்களும் பெற்று தான் யார் என்பதை நிரூபித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒருநாள் தொடரில் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
தங்கராசு நடராஜன் :
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர். இவர் மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமானார். இவர் பங்குபெற்ற 4 போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்திருந்தார். இவர் தனது முதல் சர்வதேச போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையும் தற்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது முகமது சாமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் நடராஜன் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
ஷர்துல் தாகூர் :
இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் ஒருநாள் தொடரில் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டு அதன் மூலம் டி20 தொடரில் இடம்பெற்றார். இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் முக்கியமான 2 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். எனவே தற்போது இவரும் டெஸ்ட் பேக்கப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.