தோனியின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் 5 அடுத்த தலைமுறை வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni-1

தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றி விட்டார். ஒரு விக்கெட் கீப்பராக மட்டுமில்லாமல் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆக, மிகச்சிறந்த கேப்டனாக 3 பேரின் வேலையை சேர்த்து ஒரே ஆளாக செய்திருக்கிறார். தற்போது அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள ஐந்து இளம் விக்கெட் கீப்பர்கள் பற்றி பார்ப்போம்.

kishan

இசான் கிசான் :

இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடிய அவர் உள்ளூர் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார். விக்கெட் கீப்பராக இருக்கிறார் .தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இவருக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது.

karthik

தினேஷ் கார்த்திக் :

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இவர் தோனியால் இந்திய அணியில் இடம் இல்லாமல் தவிப்பவர். தற்போது 33 வயதாகிறது ஒருவேளை தோனி இந்த வருடம் ஓய்வு பெற்று விட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு இவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.

dhoni with pant

ரிஷப் பண்ட் :

தோனி இருக்கும் போது இவர் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார். தற்போது அனைத்து விதமான போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இன்னும் சில ஆண்டுகள் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியும் என்று அணி நிர்வாகம் நினைக்கிறது.

Samson

சஞ்சு சாம்சன் :

தோனியின் தலைமையில் 2014 ஆம் ஆண்டே இவர் அறிமுகம் ஆகிவிட்டார் அடுத்து விக்கெட் கீப்பர் வரிசையில் இவர்தான் முதல் இடம் பிடித்துள்ளார். தற்போது இவருக்கு 25 வயதுதான் ஆகிறது தோனி இந்த வருடம் ஓய்வு பெற்றால் கூட அடுத்த பத்து வருடங்களுக்கு இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இருக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு இருக்கிறது.

கே எல் ராகுல் :

விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்று பாராட்டப்படுபவர். இவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும். ரிஷப் பந்த் இந்திய அணியில் கீப்பராக சொதப்பிக் கொண்டிருந்த போது இவர்தான் தற்போது கீப்பராக இருக்கிறார் இவருக்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது.