IND vs BAN : இதெல்லாம் மறக்க முடியுமா? ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – வங்கதேசம் 5 மறக்க முடியாத போட்டிகள்

Binny
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்தில் விளையாடிய நிலையில் அடுத்ததாக வங்கதேசத்தில் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறுகிறது. எனவே அதை வெல்வதற்காக வங்கதேசம் பயணத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக என்னதான் வங்கதேசம் கத்துக்குட்டியாக இருந்தாலும் சில சமயங்களில் இந்தியாவுக்கு கடும் சவாலை கொடுத்து தலைகுனியும் தோல்விகளை கொடுத்துள்ளது. ஆனால் அதற்கு கதறும் அளவுக்கு இந்தியாவும் இரு மடங்கு பதிலடிகளை கொடுத்த வரலாறுகள் உள்ளது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மோதிய சில மறக்க முடியாத போட்டிகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. முதல் வெற்றி: கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வழக்கம் போல வென்றது. இருப்பினும் 2வது போட்டியில் அப்தாப் அஹமத் 67 ரன்கள் எடுத்த உதவியுடன் வங்கதேசம் போராடி 229/9 ரன்கள் சேர்த்தது.

அதைத் துரத்திய இந்தியாவுக்கு ஸ்ரீராம் 57 ரன்களும், முகமது கைஃப் 49 ரன்களும் எடுத்து போராடிய போதிலும் மஸ்ரபி மொர்தசா பவுலிங் கூட்டணி அற்புதமாக செயல்பட்டு ஆல் அவுட்டாக்கியது. அதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

4. மறக்க முடியா தோல்வி: 2007இல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே 85/4 என தடுமாறினாலும் யுவராஜ் சிங் 47 ரன்களும் சௌரவ் கங்குலி 66 ரன்கள் எடுத்ததால் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால் அதன்பின் சீட்டு கட்டு போல சரிந்த இந்தியா 191 ரன்களும் சுருண்ட நிலையில் அதை சாகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹீம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் எளிதாக சேசிங் செய்த வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காலத்திற்கும் மறக்க முடியாத தோல்வியை கொடுத்தது. அதனால் உலகக் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியதை இப்போதும் ரசிகர்கள் மறக்க முடியாது.

- Advertisement -

3. முரட்டு அடி: கடந்த 2011இல் நடைபெற்ற உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட இந்தியாவுக்கு வீரேந்திர சேவாக் 2007 தோல்வியை மனதில் வைத்துக் கொண்டு முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்க விட்டு 170 (140) ரன்கள் விளாச அவருடன் விராட் கோலி 100 (83) ரன்களை குவித்தார்.

அதனால் இந்தியா எடுத்த 370 ரன்களை துரத்திய வங்கதேசம் முனாப் பட்டேல் 4 விக்கெட்டுகள் எடுத்தது உட்பட இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 2007க்குப்பின் நிறைய வெற்றிகளை பதிவு செய்தாலும் வங்கதேசத்தை அதே உலக கோப்பையில் அதன் சொந்த மண்ணில் புரட்டி எடுத்த இந்தியா பழி தீர்த்துக் கொண்டது.

- Advertisement -

2. போய்ட்டு வாங்க: 2015 உலக கோப்பையில் அசத்தலாக செயல்பட்டு காலிறுதி வரை வந்த வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்த இந்தியா 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அரையிறுதியுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஃபைனலை தொட விடாமல் மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

அப்போட்டியில் தமீம் இஃபால், முஸ்தபிசுர் ரஹீம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் நல்ல நிலையில் இருந்த வங்கதேசத்தை பகுதி நேர பவுலராக உள்ளே புகுந்த கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்து 264 ரன்களுடன் கட்டுப்படுத்த உதவினார். அதைத் துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி 87 ரன்களும் ரோஹித் சர்மா 123* ரன்களும் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வங்கதேசத்தை ஒரு ஐசிசி தொடரின் ஃபைனலுக்கு முதல் முறையாக முன்னேறுவதை தடுத்து நிறுத்தினார்கள்.

1. பின்னி மேஜிக்: கடந்த 2014இல் டாக்காவில் மழையால் பாதிக்கப்பட்ட ஒரு போட்டியில் தஸ்கின் அகமது 5 விக்கெட் எடுத்த அதிரடியில் சொதப்பிய இந்தியா வெறும் 105 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 2007 போல தலைகுனியும் தோல்வி உறுதி என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது மேஜிக் செய்த ஸ்டூவர்ட் பின்னி அனலாக பந்து வீசி 4 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து வங்கதேசத்தை 58 ரன்களுக்கு சுருட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக வரலாறு படைத்தார்.

அதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசத்தை ஸ்டுவர்ட் பின்னியிடம் சரணடைந்ததற்காக இப்போதும் ரசிகர்கள் கலாய்ப்பார்கள். ஆனால் உண்மையாகவே அன்றைய நாளில் அவர் அற்புதமாக பதிவு வீசி இந்தியாவை தலைநிமிர வைத்தது பாராட்டுக்குரியது.

Advertisement