இந்திய அணியின் தலைசிறந்த டாப் 5 பெஸ்ட் பீல்டர்ஸ். இதுல உங்க சாய்ஸ் யாரு – லிஸ்ட் இதோ

Raina
- Advertisement -

பேட்டிங், பந்துவீச்சு ஆகியவற்றை தவிர்த்து இந்தியா பீல்டிங்கிற்கும் பெயர் போனது. அந்த காலம் முதலே மிகச்சிறந்த பீல்டர்களை உருவாக்கி வந்துள்ளது. தற்போது அப்படிப்பட்ட மிகச் சிறந்த ஐந்து இந்திய பீல்டர்களை தற்போது பார்ப்போம்.

ஏக்நாத் ஹோல்கர் :

- Advertisement -

இவர் 1969 முதல் 1977 வரை இந்திய அணிக்காக ஆடியவர். ஷார்ட் லெக் வரிசையில் நிற்பதில் வல்லவர். மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி 53 கேட்சுகள் பிடித்துள்ளார். அதுவும் ஷார்ட் லெக் திசையில் நின்று ஹெல்மெட் அணியாமல் கேட்ச் பிடிப்பதில் இவர் வல்லவர். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர் இவர்தான்.

Kaif

முகமது கைப் :

- Advertisement -

இந்திய அணிக்காக ஆறு வருடங்கள் விளையாடியவர். 13 டெஸ்ட் போட்டிகளிலும் 175 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி அபாரமாக 135 கேட்சுகள் பிடித்துள்ளார். உலக கோப்பை தொடரின் ஒரே போட்டியில் 5 கேட்சுகள் பிடித்த முதல் வீரர் இவர் தான். எந்த ஒரு கட்டத்திலும் அசராமல் கீழே விழுந்து பிடிப்பதில் வல்லவர்.

yuvraj

யுவராஜ் சிங் :
19 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடியவர். 40 டெஸ்ட் போட்டிகள் 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் விளையாடி 137 கேட்சுகளை பிடித்துள்ளார். இடதுகை வீரரான இவர் அனாசயமாக ரன்அவுட் செய்வதிலும் வல்லவர்.

- Advertisement -

Robin 1

ராபின் சிங் :

இவர் இந்திய அணிக்காக 1989 முதல் 2001ம் ஆண்டு வரை விளையாடினார் இவர் சென்னையை சேர்ந்தவர். மொத்தம் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 கேட்சுகள் பிடித்துள்ளார். இவர் பிடித்த அனைத்து கேட்சுகளுமே ஆட்டத்தை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பீல்டிங் கோச்சாகவும் இவர்தான் இருந்தார்.

Jadeja

ரவீந்திர ஜடேஜா :

தற்போதைய காலகட்டத்தில் மிகச் சிறந்த பீல்டர். இவர்தான் 11 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ராக்ஸ்டார் ரவீந்திர ஜடேஜா என்று இவரை அழைப்பார்கள். 46 டெஸ்ட் போட்டிகளிலும் 156 ஒருநாள் போட்டிகளிலும் 44 டி20 போட்டிகளிலும் விளையாடி 110 கேட்ச்களை பிடித்துள்ளார். சென்ற வருடம் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மட்டும் 3 போட்டிகளில் விளையாடி 45 ரன்களை ஒரு பீல்டராக சேவ் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement