- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கவர்மென்ட் வேலையில் இருக்கும் 5 இந்திய வீரர்கள் ? அவர்களது வேலையை பற்றி தெரியுமா ? – லிஸ்ட் இதோ

எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்திய அணியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏகாதிபத்திய செல்வாக்கும், செல்வமும் இருக்கிறது. இதை நம்மால் மறுக்க முடியாது. இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்தால் உங்களுக்கு அனைத்து வசதிகளும் வீடு தேடி வரும். அதனை தாண்டி கோடிக்கணக்கில் செல்வங்களும் சேர்ந்துவிடும். அப்படி விளையாடும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் சம்பளம் பெறுவது மட்டுமல்லாது அவர்களுக்கு மத்திய அரசின் ஒரு சில துறையில் தாமாகவே முன்வந்து கௌரவமாக அரசாங்க பதவிகளை கொடுப்பார்கள். அப்படி தற்போது அரசாங்க வேலை செய்துகொண்டு இந்திய அணியில் விளையாடி கொண்டிருக்கும் வீரர்களை பற்றி பார்ப்போம்.

கேஎல் ராகுல் :

- Advertisement -

கடந்த 8 வருடமாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு 28 வயதாகிறது. இவர் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன்னரே ரிசர்வ் வங்கி இவருக்கு வேலை கொடுத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு கிளையில் இவர் துணை மேலாளராக தற்போது வேலை செய்து வருகிறார். இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போதும் இவருக்கு சம்பளம் வந்து சேர்ந்துவிடும்.

ஜோகீந்தர் சர்மா :

- Advertisement -

2007ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய பிரபலமானவர். இவர் டி20 உலகக்கோப்பை முடிந்த பின்னர் இரண்டு வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து ஹரியானா மாநிலம் இவருக்கு கவுரவ காவல்துறையில் டி.எஸ்.பி பதவி கொடுத்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக இவர் வேலை செய்து வருகிறார்.

மகேந்திர சிங் தோனி :

- Advertisement -

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனான இவர் 2020ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய ராணுவம் இவரை கௌரவ பதவி கொடுத்து தற்போது வரை அந்த பதவியில் வைத்திருக்கிறது. மகேந்திர சிங் தோனியின் ராணுவ பற்று குறித்து அனைவருக்கும் தெரியும் என்பதை நாம் அறிவோம்.

சச்சின் டெண்டுல்கர் :

- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். 2010-ஆம் ஆண்டு இவருக்கு இந்திய விமானப்படை கேப்டன் பதவி கொடுத்து அழகு பார்த்தது. தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

யுஸ்வேந்திர சாஹல் :

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் இவர் கடந்த 5 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பாகவே வருமான துறையில் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by