இந்திய அணியில் பப்ஜி விளையாடும் பழக்கத்தை வைத்துள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni

இந்தியா முழுவதும் இளைஞர்களால் கடந்த இரண்டு வருடங்களாக விளையாடப்பட்டு வந்த பப்ஜி விளையாட்டு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு சிறியவர், பெரியவர் மற்றும் பிரபலங்கள் என அனைவரையும் வெகுவிரைவிலேயே கவர்ந்தது. அப்படி பப்ஜி விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று தெரியுமா ? அதுகுறித்த சிறப்பு தகவலினை இந்த பதிவில் காண்போம்.

Dhoni-1

மகேந்திர சிங் தோனி :

அவ்வப்போது பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் இரவில் கூட பப்ஜி குறித்து புலம்புகிறார் என்றும் சமீபத்தில் நடைபெற்ற இன்டர்வியூ ஒன்றில் அவரது மனைவி சாக்ஷி இது குறித்து பேசுவதை நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு தோனி ஒரு பப்ஜி பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jadhav-3

கேதர் ஜாதவ் :

- Advertisement -

தோனி செய்வதை எல்லாம் செய்வார். அவருடைய குழுவில் இவரும் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இவரும் ஒரு பப்ஜி பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chahal

சாஹல் :

அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்கள் சாகல் இவர்கள் அனைவரையும் தாண்டி சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடும் வீரர்களுடன் பப்ஜி விளையாட்டில் நட்பு வைத்துள்ளார். மேலும் இந்திய அளவில் ஒரு பப்ஜி தொடரிலும் சாஹல் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் அவ்வப்போது விளையாடுவதை நாம் யூட்யூப் தளத்தில் பார்த்திருப்போம்.

Shami

முஹமது ஷமி :

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இதனை அவ்வப்போது ஆடிக் கொண்டிருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ஐபேட் வைத்து விளையாடிக் கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியானது .

Dhawan

ஷிகர் தவான் :

பப்ஜி விளையாடுவார் என்று தற்போது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் சமீபகாலமாக தனது மகனுடன் எப்போது பார்த்தாலும் பப்ஜி விளையாடிக் கொண்டு இருப்பதாக அவரது மனைவி சமூகவலைதளத்தில் குற்றம் சாட்டியதை நாம் பார்த்திருப்போம்.