- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் போட்டியில் அதிக பந்துகளை விழுங்கி பொறுமையாக சதமடித்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

இந்திய அணிக்காக இதுவரை பல நூறு சதங்கள் விளாசப்பட்டுள்ளன அதில் சிலர் மிக பொறுமையாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் மிக மெதுவாக சதமடித்த வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

சௌரவ் கங்குலி :

- Advertisement -

2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜாம்ஷெட்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் சௌரவ் கங்குலி சதம் அடித்திருந்தார். ஆனால் இந்த சதம் 136 பந்துகள் பிடித்த பின்னர் தான் அடிக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் :

- Advertisement -

இவர் சதம் அடிப்பதற்கென்றே பெயர் போனவர். ஆனால் இவரது நூறாவது சதம் இவருக்கு மோசமான சாதனையை பெற்றுத் தந்துள்ளது .இந்த நூறாவது சதத்தை அடிக்க சச்சின் டெண்டுல்கர் 138 பந்துகள் எடுத்துக்கொண்டார். 2012 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக இந்த சாதத்தை அடித்திருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் :

- Advertisement -

மீண்டும் இந்த பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பெற்றிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். 2000ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கடுமையாக போராடி வலிமையான பந்துவீச்சை எதிர்கொண்டு 138 பந்துகளை பிடித்த பின்னர் ஒரு சதத்தை அடித்தார் சச்சின். இந்த போட்டியில் இந்தியா தோற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

அஜய் ஜடேஜா :

- Advertisement -

1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அற்புதமாக விளையாடினார். இவர் 138 பந்துகளை பிடித்து சதம் அடித்தார். ஆனால் இறுதியில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது.

சௌரவ் கங்குலி :

இந்த பட்டியலில் மீண்டும் இரண்டாவது முறையாக இடம்பெற்றிருக்கிறார் சௌரவ் கங்குலி. 1999ம் ஆண்டு நாக்பூர் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி 278 ரன்கள் விளாசிய அதில் சௌரவ் கங்குலி மட்டும் சதம் அடித்திருந்தார். அதுவும் 147 பந்துகளில் சதம் அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -
Published by