பள்ளி படிப்போடு நிறுத்திவிட்டு கிரிக்கெட்டிற்கு வந்து காலேஜ் பக்கம் கூட போகாத 5 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களின் பெயரைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயமாக பல இந்திய வீரர்களின் பெயர்கள் இடம்பெறும். அவர்களில் பல வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது படிப்பிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். ஆனால் சில வீரர்கள் தங்களது பள்ளிப் படிப்பு முடிந்ததும் கிரிக்கெட்டை முதன்மையாக கருதி, அதற்காக கல்லூரி படிப்பையே கைவிட்டவர்கள் என்பதுதான் ஆச்சர்யமான விடயமாகும். இப்படி கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்காக தங்களது கல்லூரி படிப்பை தியாகம் செய்த ஐந்து இந்திய வீரர்களை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

kohli 1

விராட் கோலி:

- Advertisement -

நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விளங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லி, தன்னுடைய பள்ளிப் படிப்பை டெல்லியில் உள்ள சேவியர் கான்வென்ட்டில் முடித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தப் பின்னர், கிரிக்கெட்டையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட இவர், அதற்குப் பிறகான கல்லூரி படிப்பை தொடரவே இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் முன்னாள் ஜாம்பவான்கள் படைத்த பல சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டு வரும் விராட் கோஹ்லி, டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகையான போட்டிகளிலும் 50 சராசரி வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான்:

- Advertisement -

ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர் என்றாலே, அதில் இந்திய அணிக்காக ஷிகர் தவானின் பங்கு அதிகமாகவே இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழும் இவர், 2004ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய யு19 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியிலில் 505 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்து அசத்தினார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ள செயின்ட் மார்க்ஸ் உயர் நிலைப் பள்ளியல் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் இந்திய கிரிக்கெட்டிற்குள் வந்தவர்தான், அதன் பிறகு படிப்பு என்ற பக்கமே செல்லவில்லை.

Zaheer-Khan

ஜாகீர் கான்:

இந்தியாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஜாகீர் கான், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற மிகப் பெரிய காரணமாக இருந்தார். இளம் வயதில் படிப்பிலும் சிறந்து விளங்கிய இவர், உயர் நிலைக் கல்வியில் 83% மதிப்பெண்களை எடுத்து ஒரு இன்ஜினியரிங் கல்லூரியிலும் சேர்ந்தார். ஆனால் அதன் பிறகு பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, தன்னுடையை கவனம் முழுவதையும் கிரிக்கெட்டின் பக்கம் திருப்பிக்கொண்டார்.

Sachin 1

சச்சின் டெண்டுல்கர்:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின், 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். 14 வயதிலேயே ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் அறிமுகமான இவர், தன்னுடைய 16வது வயதிலேயே இந்திய தேசிய அணியிலும் இடம்பிடித்து விட்டார். அதற்குப் பிறகு 24 வருடங்களாக தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Yuvi 2

யுவராஜ் சிங்:

யுவராஜ் சிங்கின் படிப்பானது அவருடைய கிரிக்கெட் திறமையை பாதிக்கிறது என்று உணர்ந்த அவருடைய அப்பா, அவரை கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த அனுமதித்தார். அவருடைய அப்பாவின் அந்த முடிவால் அவரால் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மாற முடிந்தது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடர் என இரண்டு தொடர்களிலும் தொடர் நாயகன் விருது வாங்கிய யுவராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த பிறகு தான் தன்னுடைய கல்லூரி படிப்பை தொலைதூர கல்வி மூலம் முடித்தார். அதற்கு முன்பு வரை பள்ளிப் படிப்பு வரை மட்டுமே படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement