டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதமடித்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள். அசரவைக்கும் ஹிட்டர்ஸ் – லிஸ்ட் இதோ

Pandya

டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிப்பது சற்று கடினமான விஷயம். அதிலும் அதிரடியாக விளையாடி இந்திய வீரர்கள் சதம் அடித்து இருக்கிறார்கள் .அப்படி அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Kapil

கபில்தேவ் / ஹர்திக் பாண்டியா :

இந்த இருவரும் டெஸ்ட் போட்டியில் 86 பந்துகளில் சதமடித்து இருக்கின்றார்கள். கபில்தேவ் 1981ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஹர்திக் பாண்டியா 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 86 பந்துகளில் சதம் அடித்திருந்தனர். இதன்மூலம் இருவரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

dhawan

ஷிகர் தவான் :

- Advertisement -

தோனியின் காலத்தில் அறிமுகமான அதிரடி வீரர் இவர். 2013ம் ஆண்டு தனது முதல் போட்டியில் ஆடிய இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 85 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதன்மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஷிகர் தவான்.

விரேந்தர் சேவாக் :

டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக ஆடுவதற்கு பெயர் போனவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு அதிரடியாக விளையாடிய விரேந்தர் சேவாக் வெறும் 78 பந்துகளில் சதம் விளாசினார். இந்த தொடரில் மட்டும் விரேந்தர் சேவாக் 588 ரன்கள் குவித்து இருந்தார்.

Azharuddin

முகமது அசாருதீன் :

இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் போனவர். 1997ம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய இவர் 74 பந்துகளில் சதம் விளாசினார்.

kapil-dev

கபில்தேவ் :

இந்திய அணிக்கு முதன்முதலில் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் இவர். ஆல்-ரவுண்டராக இருந்த இவர் பேட்டிங்கில் பட்டையை கிளப்புவார் .இலங்கை அணிக்கு எதிராக 1986 ஆம் ஆண்டு வெறும் 74 பந்துகளில் சதமடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.