விராட் கோலி அறிமுகமான காலத்தில் இந்திய அணிக்காக அறிமுகமாகி காணாமல் போன 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Kohli
- Advertisement -

தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. அவர் அனைத்து பார்மேட்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆவார். 2008 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இரண்டாவது கேப்டனாகவும் கோலி திகழ்ந்தார்.

Kohli 1

அண்டர் 19 லெவலில் அவரது மகத்தான பெர்பார்மன்ஸுக்கு பிறகு இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடக்க பதிப்பிற்கு அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. விரைவில், அவர் தேசிய அணியிலும் சேர்க்கப்பட்டார், அங்கே தொடங்கி விராட் கோலி தற்போது உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஆவார். விராட் கோலி ஒவ்வொரு நாளும் ஒரு உலக சாதனைகளை உருவாக்கி வருகிறார், அதே நேரத்தில் அவருடன் சேர்ந்து அறிமுகமான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மறைந்துவிட்டனர்.

- Advertisement -

மன்பிரீட் கோனி :

காயமடைந்த ஸ்ரீசாந்திற்கு பதிலாக பஞ்சாபில் இருந்து வலது கை வேகப்பந்து வீச்சாளரான மன்பிரீத் கோனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் தொடக்க வருடத்தில் 16 ஆட்டங்களில் ஆடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் அனைவரது கவனத்தையும கவர்ந்தார். டெத் ஓவர்களில் மன்பிரீத் கோனி தனது அணிக்காக பெரிய ஷாட்களை நன்றாக விளையாடவும் தெரியும். ஆனால் அவர் தேசிய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் போனது. பின்பு விரைவில் அவர் இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

- Advertisement -

gony

ஆனால், இந்தியன் பிரீமியர் லீக்கில் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடினார். 2019 ஆம் ஆண்டில், 2019 குளோபல் டி 20 கனடா போட்டியில் டொராண்டோ நேஷனல்ஸ் அவரை தேர்வு செய்தனர்.

சுப்ரமணியம் பத்ரிநாத் :

- Advertisement -

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத்துக்கு அற்புதமான பேட்டிங் திறன் இருந்தது. உள்நாட்டு அளவில் அவரது மகத்தான பேட்டிங் திறமைக்கு பிறகு, ஐபிஎல் 2008 இல் சென்னை சூப்பர் கிங்ஸால் ஏலத்தில் வாங்கப்பட்டார். ஐ.பி.எல்லில் சென்னைக்காக பல போட்டியில் இக்கட்டான நேரத்தில் இறங்கி அணியை வெற்றி பெற செய்ய இவரால் முடியும். 2008 ஆம் ஆண்டில் அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் வாய்ப்பை இவரால் சரியாக பயன்படுத்த முடியவில்லை, ஏனெனில் அவர் 7 ஒருநாள் போட்டிகளில ஆடி வெறும் 79 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Badrinath

2011 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறவும் தவறிவிட்டார். உலகக் கோப்பை முடிந்ததும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இது அவரது கடைசி சர்வதேச தொடராகும். கிரிக்கெட்டில் இருந்து வெளியேறிய பின் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒரு வர்ணனையாராக இருக்கிறார்.

- Advertisement -

பிரகியன் ஓஜா :

தரமான சுழற்பந்து வீச்சாளர்களை தயாரிப்பதில் இந்திய கிரிக்கெட் அணி தனித்துவமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் போன்றவர்கள் அவரகளது கை விரல்களால் தங்கள் வாழ்க்கை முழுவதும் எதிரிகளை அழித்தவர்கள். இந்திய அணி இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்து வீச்சாளரை பிரக்யன் ஓஜா வடிவத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. 2008 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் அறிமுகமானார்.

ஆனால், அவர் 18 ஒருநாள் போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்ததால் லிமிட்டெட் ஓவர்கள் வடிவத்தில் பெரிதாக எதும் செயல்படவில்லை. விரைவில், அவர் டெஸ்ட் விளையாட்டில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். ஆனால், காயங்கள் அவரது டெஸ்ட் வாழ்க்கையையும் காயப்படுத்தின. பிரக்யன் ஓஜாவின் கடைசி டெஸ்ட் விக்கெட் கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரின் கடைசி சர்வதேச விளையாட்டு ஆகும்.

அப்போதிருந்து, ஓஜா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட்டின் எந்த போட்டியிலும் தோன்றவில்லை. ஓஜா 24 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 113 விக்கெட்டுகளையும், டி 20 சர்வதேச போட்டிகளில் இருந்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து விளையாடினார். 21 பிப்ரவரி 2020 அன்று, அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மனோஜ் திவாரி :

மனோஜ் திவாரி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்ஸ்மேன்களில் ஒருவர்.உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது அற்புதமான பயணங்களுக்குப் பிறகு, அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் 2010 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் அறிமுகமானார். உள்நாட்டு சுற்றில் அவர் நல்ல முறையில் ஆடியிருந்தபோதிலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் தனது அடுத்த ஒருநாள் தொடரில் விளையாடினார்.

Tiwary 1

அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு சதம் அடித்தார், ஆனால் அது இந்திய அணியில் அவரது இடத்தை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை. இருப்பினும், அவர் இந்திய அணியில் மீண்டும் நுழைந்தார், ஆனால் இந்த முறை ஒரு ஆல்ரவுண்டராக. லெக் ஸ்பின் மூலம் இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் தனது கடைசி சர்வதேச விளையாட்டை 2015 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினார்.

அப்போதிருந்து, அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் வங்காளத்துக்காக விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்பு ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அவர்களால் இவர் வாங்கப்பட்டார். பின்னர் 2019 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை வாங்காமல் கைவிட்டது. ஜனவரி 2020 இல், முதல் வகுப்பு கிரிக்கெட்டில் தனது முதல் மூன்று சதத்தை அடித்தார். இருப்பினும், அவரது சர்வதேச இடம் கனவாகவே முடிந்துவிட்டது.

யூசுப் பதான் :

2007 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமான பரோடாவைச் சேர்ந்த வீரர் யூசுப் பதான் ஆவார் , இந்திய அணியின் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக முக்கியமான ஆளாக கருதப்பட்டார். அவர் இந்திய அணிக்கு பினிஷிங் ஓவர்களில் ஒரு முக்கிய வீரராக இருந்தார். அவர் ஒரு ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரராக இருந்ததால் பல வாய்ப்புகளைப் பெற்று வந்தார்.

Yusuf

பாகிஸ்தானுக்கு எதிரான 2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தனது அணிக்கான இன்னிங்ஸைத் முதன் முதலாக திறந்தார். 2009 டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இருந்து விலகினார். நடுத்தர ஓவர்களில் அவரது ஆக்ரோஷமான பேட்டிங் திறன் 2011 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற உதவியது. ஆனால், அவரது திறமை நாளாக நாளாக போதுமானதாக இல்லாமல் போனதால் நாட்டிற்காக கடைசி ஆட்டத்தை 2012 ஆம் ஆண்டு விளையாடினார்

57 ஒருநாள் போட்டிகளில் 810 ரன்களும், 22 டி20 போட்டிகளில் இருந்து 236 ரன்களும் அடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஐ.பி.எல்.லில் அவர் கே.கே.ஆர் அணியின் முக்கிய வீரராக இருந்தார், இருப்பினும் அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அவரை ஐ.பி.எல் 2018 க்கு முன்னால் கே.கே.ஆர் விடுவித்தது. ஹைதராபாத் அவரை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்து 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு தக்க வைத்துக் கொண்டது. பின்னர் அவரை 2020 ஏலத்தில் விடுவித்து விட்டது . அவருக்கு தற்போது விளையாடும் ஏற்ப வயது இல்லை என்பதால், சர்வதேச அளவில் மீண்டும் வருவது சாத்தியமில்லாததாகும்.

Advertisement