டி20 உலககோப்பைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள 5 இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

Gill
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 13வது ஐபிஎல் சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்ததில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. 13வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். தற்போது ஐபிஎல் தொடரின் மூலம் 2021 டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்புள்ள 5 வீரர்கள் பற்றி காண்போம்.

siraj

- Advertisement -

முகமது சிராஜ் :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் கொல்கத்தா அணிக்கு எதிராக பந்து வீசிய போது மூன்று ஓவர்களுக்கு 8 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். இவர் இரண்டு மெய்டன் ஓவர்களை வீசி அனைவரையும் மிரள வைத்தார். இதன் மூலம் இவர் 2021 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

Sundar-2

வாஷிங்டன் சுந்தர் :

- Advertisement -

மற்றொரு பெங்களூர் அணி வீரரான வாஷிங்டன் சுந்தரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்பின் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். இவர் தனது அதிரடியான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலம் தற்போது இந்திய அணிக்கு தேவைப்படும் வீரராக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி வருகின்ற டி20 உலக கோப்பை தொடரிலும் இடம் பெற தகுதியானவர்.

Tewatia

ராகுல் திவதியா :

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லெக்-ஸ்பின் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் ஷெல்டன் கோட்ரெல் வீசிய ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார். இவரது துல்லியமான லெக்-ஸ்பின் மூலம் 2021 டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலிக்கு தேவைப்படும் வீரராக மாறியுள்ளார். எனவே இவர் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saini 1

நவ்தீப் சைனி :

- Advertisement -

பெங்களூர் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான நவ்தீப் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் பங்குபெற்ற 10 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் மட்டும் எடுத்திருந்தாலும், அவரது பந்துகளை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதன் மூலம் விராட் கோலியின் நம்பிக்கை வீரராக மாறினார். இதன் காரணமாக இவர் டி20 தொடரில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது.

gill

சுப்மான் கில் :

சுப்மான் கில் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். எனவே இந்தியாவுக்கான டி 20 உலகக் கோப்பையில் சுப்மான் கில் பேக்-அப் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யலாம்.

Advertisement