சிறப்பாக விளையாடியும் தோனி மாற்றம் கோலி ஆகிய இருவரும் ஆதரவு அளிக்காத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Kohli-2
- Advertisement -

உலகத்தரம் வாய்ந்த இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்றாலே விராட் கோலி மற்றும் தோனி தான் நம் எண்ணத்திற்கு முதலில் வருகிறது. இதில் தோனி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். விராட் கோலி தற்போது இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தந்து வருகிறார். இந்நிலையில், இவர்களது கேப்டன்ஷிப்பில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. விராட் கோலி தனது அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வார். அதேபோல் தோனி சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து விளையாடுவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஆதரிக்காத ஐந்து கிரிக்கெட் வீரர்கள் பற்றி இதில் காண்போம்..,

- Advertisement -

அமித் மிஸ்ரா :

அமித் மிஸ்ரா இந்திய அணியின் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் 2003ல் ஒருநாள் தொடரில் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இதன்பிறகு ஐந்து வருடம் கழித்து 2008ம் ஆண்டு அணில் கும்ப்ளேவின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். இவர் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். சிறந்த நிலையிலிருந்தும் இவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை தோனி தேர்வு செய்தார். இதனால் மிஸ்ரா 4 வருடம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் போய்விட்டது. விராட் கோலியின் அணியில் இடம் கிடைத்தது. இதன் பிறகு இவரை இருவரும் மீண்டும் தனது அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.

axar

அக்சர் பட்டேல் :

- Advertisement -

இவர் இந்திய அணியின்இடது கை பந்து வீச்சாளர். இவர் 2014 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரிலும், 2015ஆம் ஆண்டு டி20 தொடரிலும் இந்திய அணியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக மொத்தம் 49 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் தலைமையில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் சகால் இந்திய அணியில் இடம் பெற்றதற்கு பிறகு இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்பிறகு தோனி மற்றும் விராட் கோலி மீண்டும் ஆக்சர் பட்டேலை ஆதரிக்க மறுத்து விட்டனர்.

varun-aaron

வருண் ஆரோன்:

- Advertisement -

இவர் இந்திய அணியின் முன்னாள் வலது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். இவர் இந்திய அணிக்காக மொத்தம் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பரில் சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். இதன்பிறகு விராட் கோலி மற்றும் டோனி இருவரும் இவரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர்.

மனிஷ் பாண்டே :

- Advertisement -

இவர் இந்திய அணியின் முக்கியமான வலது கை நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். இவர் விராட் கோலி மற்றும் தோனி தலைமையில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் அறிமுகமாகியுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வாரா என்பதே பார்ப்போம்.

Binny 3

ஸ்டூவர்ட் பின்னி:

சர்வதேச கிரிக்கெட் வீரரான இவர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்திலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் இந்திய அணியின் வேகப்பந்து ஆல்ரவுண்டர் ஆவார். இவர் 2015 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கு பெற்றுள்ளார். கோலி தலைமையில் 2015ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற போது அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. விராட் கோலி மற்றும் தோனி அவருக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டனர்.

Advertisement