சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் அவுட்டில் ஈடுபட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் – சுவாரசிய பட்டியல் இதோ

Pak vs Aus Inzamam Ul Haq Run Out
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை குவித்து வெற்றியைத் தேடிக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்குவார்கள். அப்படி களமிறங்கும் பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான போட்டிகளில் தரமான எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எடுத்த எடுப்பிலேயும் எப்போதும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு அதிரடியாக விளையாட முடியாது. அதனால் அடிப்படை விதி முறைப்படி தனது பார்ட்னர் எனப்படும் எதிர்ப்புறம் இருக்கும் பேட்மேனுடன் கைகோர்க்க வேண்டியுள்ள அந்த பேட்ஸ்மேன் அவருடன் இணைந்து பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியையும் தாமும் வெற்றியை நோக்கி முன்னெடுத்து செல்ல நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

rohith

- Advertisement -

அப்படி நிதானமாக பேட்டிங் செய்யும்போது அதிக பந்துகளை எதிர்கொள்ளாமல் எதிரணி மீது அழுத்தத்தை போடுவதற்காக எப்போதுமே இரு பேட்ஸ்மேன்களும் மாறி மாறி சிங்கிள் மற்றும் டபுள் போன்ற ரன்களை எடுத்துக் கொண்டே இருப்பது அவசியமான ஒன்றாகும். அதுபோன்ற சிங்கிள் மற்றும் டபுள் ரன்கள் எடுப்பதற்கு இரு பேட்ஸ்மேன்களிடையே நல்ல புரிதல் புரிதல் வேண்டுவதுடன் ஒரு பேட்ஸ்மேன் ரன் எடுப்பதற்கு அழைத்தால் அதை நம்பி மற்றொரு பேட்ஸ்மேன் முழுமூச்சாய் ஓடி ரன்னை வெள்ளைக்கோட்டை தொட்டு முடித்தால் மட்டுமே அம்பயர்கள் ரன்களை கொடுப்பார்.

இப்டி பண்ணிட்டீங்களே பார்ட்னர்:
ஆனால் சில சமயங்களில் ரன்களை எடுக்க விடாமல் எதிரணி பீல்டர்கள் தடுக்க முயற்சிக்கும் போது அந்த ரன்னை எடுக்க முயற்சிக்கும் பேட்ஸ்மேன் பாதியில் வேண்டாம் என்று நினைத்து தடுமாறினால் 90% நிச்சயமாக அந்த இடத்தில் ரன் அவுட்டாகி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். மேலும் அரிதான சமயங்களில் அவரின் அழைப்பை ஏற்று ரன்னை எடுக்க வரும் எதிர்ப்புற பேட்ஸ்மேன் ரன் அவுட்டாகி இப்படி பண்ணிட்டீங்களே பார்ட்னர் என்று ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்படும். அந்த வகையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை ரன் அவுட்டின் ஈடுபட்ட பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்.

Inzamam

5. இன்சமாம்-உல்-ஹக் 92: சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அவுட் என்ற சொல்லை கேட்டதுமே நிச்சயம் பெரும்பாலான ரசிகர்களுக்கு இவர் நினைவுக்கு வருவார். ஏனெனில் சற்று உடல் பருமனாக இருந்தாலும் தனது திறமையால் ஏராளமான ரன்களைக் குவித்து பாகிஸ்தானின் ஜாம்பவானாக சாதனை படைத்துள்ள இவர் நிறைய தருணங்களில் ரசிகர்கள் சிரிக்கும் அளவுக்கு தாமும் தன்னுடைய பார்ட்னர் பேட்ஸ்மேனையும் ரன்-அவுட் செய்துள்ளார்.

- Advertisement -

மொத்தமாக 499 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 92 முறை ரன்-அவுட்டில் ஈடுபட்டுள்ளார். அதாவது 46 போட்டிகளில் தமக்குத்தாமே ரன் அவுட்டான இவர் 46 முறை தனது பார்ட்னர்களை அவுட் செய்து இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

jayawardene 1

4. மகிளா ஜெயவர்தானே 95: இலங்கையின் மகத்தான ஜாம்பவனாக கருதப்படும் இவர் நாட்டிற்காக மொத்தமாக விளையாடி 652 போட்டிகளில் அதிகபட்சமாக 95 முறை ரன்-அவுட்டில் ஈடுபட்ட பேட்ஸ்மேனாக இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார். அதில் 51 போட்டிகளில் தமக்கு தாமே ரன்-அவுட்டான அவர் 41 முறை போட்டிகளில் எதிர்ப்புறம் இருந்த இலங்கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார்.

- Advertisement -

3. சச்சின் டெண்டுல்கர் 98: சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் அதிக சதங்கள் அடித்து ஏறக்குறைய கிரிக்கெட்டின் அனைத்து சாதனைப் பட்டியலிலும் காலத்தால் அழிக்க முடியாத சாதனைகளை படைத்துள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலிலும் 3-வது இடம் பிடிக்கிறார்.

sachin

மொத்தமாக அவர் இந்தியாவுக்காக விளையாடிய 664 போட்டிகளில் 98 முறை ரன்-அவுட்டில் ஈடுபட்டுள்ளார். அதாவது 43 முறை தமக்குத்தாமே ரன் அவுட்டான அவர் அதைவிட அதிகமாக 55 தருணங்களில் எதிர்ப்புறம் இருந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்டாக காரணமாக இருந்துள்ளார்.

- Advertisement -

2. ராகுல் டிராவிட் 101: பொறுமையின் சிகரமாய் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் பந்தாடி ரன்களைச் சேர்த்த இவர் அவ்வப்போது சில தருணங்களில் பதற்றமடைபவராகவே இருந்துள்ளார்.

Dravid 1

அந்த வகையில் மொத்தம் இந்தியாவுக்காக 509 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 ரன்-அவுட்டில் ஈடுபட்டு இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார். அதில் 53 முறை தமக்குத்தாமே ரன் அவுட்டான அவர் 48 தருணங்களில் எதிர்ப்புறம் இருந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்டாவதற்கு காரணமாக இருந்துள்ளார்.

1. ஸ்டீவ் வாக் 104: ஆஸ்திரேலியா கண்ட மகத்தான கேப்டன் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் உலகிலேயே அதிக பட்சமாக பங்கேற்ற 493 போட்டிகளில் 104 ரன் அவுட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பேட்ஸ்மேனாக இப்பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார்.

Steve-Waugh

அதில் 31 முறை மட்டுமே தமக்கு தாமே ரன் அவுட்டான அவர் அதைவிட அதிகமாக 73 தருணங்களில் எதிர்ப்புறம் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்டாகி நடையை கட்ட முக்கியக் காரணமாக இருந்துள்ளார்.

Advertisement