ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு சதம் கூட அடித்திடாத 5 சூப்பர் பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

century
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்த விளையாட்டானது பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சொர்க்கபுரியாகவே மாறிவிட்டது என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மை. இப்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமல்ல டி20 போட்டிகளில் சதமடிப்பது கூட சர்வ சாதராணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் ஆரம்ப கால கிரிக்கெட் போட்டிகள் அப்படியில்லை. 2010ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் சதமடிப்பது என்பதெல்லாம் மிகக் கடினமான விஷயமாக பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட கால கட்டத்திலும் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து அசத்தியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர். தற்போதைய கால கட்டத்தின் முன்னனி பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் போன்றோர் சதமடிக்கவில்லை என்றால்தான் அதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியாமாக பார்க்கின்றனர். இந்த பதிவில் நிறைய ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருந்தும் ஒரு முறைகூட சதமடிக்காத ஐந்து வீரர்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

மைக்கேல் வான்:

இந்திய வீரர்களை மற்ற அணி வீரர்களோடு ஒப்பிட்டு பேசி அடிக்கடி சர்சையில் சிக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், அந்த அணிக்காக 86 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இத்தனை போட்டிகளில் விளையாடிள்ள அவர் ஒரு முறைகூட சதமடித்ததில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் அடித்த 90 ரன்களே ஒரு போட்டியில் அவரடித்த அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.

கிரஹாம் தார்பெ:

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக 82 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 21 அரைசதங்கள் அடித்திருந்தாலும் ஒரு முறைகூட 100 ரன்கள் என்ற எண்ணிக்கையை தொட்டதில்லை. அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர், மொத்தம் 2380 ரன்களை 38 என்ற சராசரியுடன் அடித்திருக்கிறார்.

Misbah

மிஸ்பா உல் ஹக்:

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இவர், தன்னுடைய நிலையான ஆட்டத்தின் மூலம் அந்த அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். 162 ஒரு நாள் போட்டிகளில், 43 என்ற சிறந்த சராசரியில் விளையாடி இருக்கும் இவரால் ஒரு போட்டியில் கூட சதமடிக்க முடியாமல் போனதுதான் ஆச்சரியாமான விஷயமாகும். ஒரு போட்டியில் இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 96ஆக இருக்கிறது.

dwayne-smith

டுவெய்ன் ஸ்மித்:

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான இவர், இந்தியாவிற்கு எதிராக அடித்த 97 ரன்களே ஒரு போட்டியில் இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. உள்ளூர் டி20 போட்டடிகளில் அதிரடி காட்டிய இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. 100 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1560 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

karthik

தினேஷ் கார்த்திக்:

நீண்ட வருடங்களாகவே இந்திய அணிக்கு வருவதும் போவதுமாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக்கிற்கு, இந்திய அணியில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்திய அணிக்காக 94 போட்டிகளில் விளையாடி 1752 ரன்கள் அடித்துள்ள இவர், ஒரு நாள் போட்டிகளில் 9 அரை சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement