ஒரே ஓவரில் 36 ரன்களுக்கு மேல் அடித்த 4 பேட்ஸ்மேன்கள். இந்திய வீரர் ஒருவரும் இருக்காரு – லிஸ்ட் இதோ

runs
- Advertisement -

இதுவரை சர்வதேச அளவில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் மூன்று வீரர்கள் (யுவ்ராஜ் சிங், கிப்ஸ், பொல்லார்டு) மட்டுமே உள்ளனர். ஆனால் பந்து வீச்சாளர்களின் தவறால் அதாவது நோபால்கள் வீசுவதன் மூலம் ஒரே ஓவரில் 36 ரன்களுக்கு மேலும் ஒரு சில பேட்ஸ்மேன்கள் ரன்களை அடித்திருக்கிறார்கள். அப்படி 36 ரன்களுக்கு மேல் ஒரே ஓவரில் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது பார்ப்போம்..,

ChrisGayle

- Advertisement -

கிறிஸ் கெயில் :

2011ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் கொச்சி அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர் 3 பவுண்டரி அடங்கும். ஒரு பந்து நோபாலாக விசப்பட்டதன் காரணமாக 36 ரன்களுக்கு மேல் சென்று விட்டது

Flintoff

ஆண்ட்ரூ பிளின்டாப் :

- Advertisement -

இவர் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். 1998ஆம் ஆண்டு உள்ளூர் போட்டி ஒன்றில் பந்து வீச்சாளர் ஒருவர் இரண்டு நோபால் வீச அந்த ஓவரில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் அடித்து 38 ரன்கள் அடித்து நொறுக்கினார்.

Chigumbura

எல்டன் சிக்கும் பாரா :

- Advertisement -

இவர் ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் 2013ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றில் 39 ரன்கள் அடித்து நொறுக்கினார்.

Pandya 1

ஹர்திக் பாண்டியா :

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சையத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 கோப்பை தொடரில் ஒரே ஓவரில் 38 ரன்கள் அடித்திருந்தார். இதில் 5 சிக்சர் இரண்டு பவுண்டரி அடங்கும்.

Advertisement