- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த டாப் 4 அதிரடி பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 6 கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று 2023 உலகக்கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கடந்த 1984 முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் 2016, 2022 தொடர்கள் மட்டும் டி20 போட்டிகளாக நடைபெற்ற நிலையில் எஞ்சிய அனைத்து தொடர்களும் 50 ஓவர் போட்டிகளாக நடைபெற்றன. அதில் அதிவேகமாக சதங்களை அடித்த டாப் 4 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. ஷாஹித் அப்ரிடி 53: கடந்த 2010 ஆசிய கோப்பையில் இலங்கையின் தம்புலாவில் நடைபெற்ற 5வது போட்டியில் வங்கதேசத்தை மிடில் ஆர்டரில் வந்து துவம்சம் செய்த கேப்டன் அப்ரிடி 17 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு 124 (60) ரன்கள் விளாசி இறுதியில் 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.

குறிப்பாக 53 பந்துகளிலேயே 100 ரன்களை தொட்டு சரவெடியாக விளையாடிய அவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரராக அன்று படைத்த சரித்திர சாதனை இன்றும் உடைக்கப்படாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

2. சனாத் ஜெயசூர்யா 55: கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் கராச்சியில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் முதலில் பந்து வீசிய வங்கதேச பவுலர்களை தொடக்க வீரராக களமிறங்கி சரமாரியாக அடித்து நொறுக்கிய இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம் தனது ஜெயசூர்யா 16 பவுண்டரி 6 சிக்சர்களைப் பறக்க விட்டு 130 (88) ரன்கள் விளாசினார்.

அதிலும் 55 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் ஆசிய கோப்பையில் அதிவேகமாக சதமடித்த இலங்கை வீரராக சாதனை படைத்து இப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார். அவருடன் சங்ககாரா 121 ரன்கள் எடுத்ததால் இறுதியில் பந்து வீச்சிலும் அசத்திய இலங்கை 158 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

3. சுரேஷ் ரெய்னா 66: அதே தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் கத்துக்குட்டியான ஹாங்காங்கை எதிர்கொண்ட இந்தியாவுக்கு கம்பீர் 51, சேவாக் 78 என தொடக்க வீரர்கள் கொடுத்த நல்ல துவக்கத்தை வீணடிக்காத வகையில் மிடில் ஆடரில் அசத்திய எம்எஸ் தோனி 109* (96) ரன்களும் சுரேஷ் ரெய்னா 101 (68) ரன்களும் எடுத்து 374/4 ரன்கள் குவிக்க உதவியினர்.

அதில் தோனியை விட சற்று அதிரடியாக விளையாடிய ரெய்னா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 100 ரன்களை தொட்டு ஆசிய கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இப்போதும் படைத்து இப்பட்டியலில் 3து இடத்தை பிடித்துள்ளார். அவரது அதிரடியான ஆட்டத்தால் இறுதியில் இந்தியா 256 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:உலக கோப்பைன்னு வந்தாலே அவர கைல பிடிக்க முடியாது, இந்தியாவ ஜெயிக்க வைப்பாரு பாருங்க – சேவாக் உறுதியான பாராட்டு

4. ஷாஹித் அப்ரிடி 68: 2010 ஆசிய கோப்பையில் தம்புலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 250 ரன்கள் துரத்திய பாகிஸ்தானுக்கு இதர வீரர்கள் திண்டாடிய போது தனி ஒருவனாக அடித்து நொறுக்கிய இவர் 109 (76) ரன்கள் விளாசி வெற்றிக்கு போராடினார். குறிப்பாக 68 பந்துகளில் 100 ரன்கள் தொட்டும் இதர வீரர்கள் சொதப்பியதால் இறுதியில் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -