2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும் மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் தேர்வு செய்யப்பட்ட கிரிஸ் மோரிஸ், செல்டன் காட்ரேல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய மூன்று வீரர்கள் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
கிரிஸ் மோரிஸ் : கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கிறிஸ் மோரிஸ் விளையாடினார். கிரிஸ் மோரிஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். ஆனால் இந்த கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் உடல் தகுதி இல்லாததால் எந்த போட்டிகளிலும் பங்கு பெறவில்லை. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இவர் விளையாட வாய்ப்பில்லை.
செல்டன் காட்ரேல் : வெஸ்ட் இண்டீஸ் வீரரான செல்டன் காட்ரேல் கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இவர் 8.5 கோடி செலவில் வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு தனது மோசமான பந்துவீச்சு காரணமாக தற்போது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்த அணியும் இவரை தேர்வு செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேதர் ஜாதவ் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கேதர் ஜாதவ் வெளியிட்டிருக்கிறார். இவர் 7.6 கோடி சம்பளம் பெற்றார். ஆனால் இவர் தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாலும் உடற்தகுதி பெறாததாலும் அணியை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.