கொரோனா பாதிக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

prasidh-krishna

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணி கடந்த 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இளம் வேகப் பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் தற்போது பிரசித் கிருஷ்ணா கொரனோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்போது குணமாகி வீடு திரும்புவார் என்று தெரியவில்லை. மேலும் அவர் குணமான பின்பு, அவருடைய உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுவார். ஒருவேளை அவர் தனது உடல் தகுதியை நிரூபிக்க தவறினால், அவருக்கு பதிலாக இன்னொரு வேகப் பந்து வீச்சாளரை இந்திய தேர்வுக் குழு தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. அப்படி இன்னொரு வேகப் பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்தால், இந்திய அணியில் சேருவதற்கான வாயப்புள்ள மூன்று இளம் வீரர்களை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Porel

இஷான் போரல்:

- Advertisement -

2018ஆம் ஆண்டு, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இந்த இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு, ஐபிஎல் தொடரில் விளையாட இதுவரை வாய்ப்பு கிடைக்காத போதும், தனது முதல் தர கிரிக்கெட்டில் மிக அற்புதமாக பந்து வீசி ஏற்கனவே இந்திய தேர்வுக் குழுவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். எனவே தான் இவருக்கு, நியூசிலாந்து சென்ற இந்தியா A அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த வருடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நெட் பௌலராக தேர்வாகிய இஷான் போரல், அந்த தொடரிலிருந்து காயம் காரணமாக பாதியிலேயே இந்தியா திரும்பி விட்டார். ஆனாலும் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்த இந்திய தேர்வுக் குழு கடந்த இங்கிலாந்து தொடரின் போது அவரை கூடுதல் வீரராக அணிக்குள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறையும் இஷான் போரலுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

tyagi

கார்த்திக் தியாகி:

- Advertisement -

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 20 வயதயான
இவர், தன்னுடைய 17வது வயதிலேயே முதல் தர கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்துவிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரின் போதே இந்திய அணியின் கூடுதல் வீரராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மேலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பந்து வீசிய அனுபவமும் இருப்பதால், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பும் இவருக்கு இருக்கிறது.

mavi

ஷிவம் மாவி:

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமை உடையவர். முதல் தர கிரிக்கெட், லிஸ்ட் A கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக பந்து வீசிய இவர், ப்ரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் விளையாடிய 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப் பந்து வீச்சுக்கு அற்புதமாக ஒத்துழைக்கும் என்பதால், இந்திய தேர்வுக் குழு இவரை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

Advertisement