4 ஆவது போட்டியில் பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Bumrah

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் எஞ்சியுள்ள நான்காவது போட்டி வருகிற 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அல்லது டிரா செய்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.அப்படி தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும். எனவே தெடரை கைப்பற்றும் முனைப்போடே இந்தியா உள்ளது.

cup

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் பும்ராவுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேப்டன் கோலி சில மாற்றங்களை முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதிலாக விளையாட போகும் அந்த வீரர் யார் என்று பார்த்தால் 3 வீரர்கள் முதன்மையில் உள்ளார்கள்.

1. குல்தீப் யாதவ் :

குல்தீப் யாதவ் சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இருப்பினும், பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் காரணமாக, அவர் கவனிக்கப்படவில்லை. ரவி அஸ்வின் ரீ எண்டிரி காரணமாக இந்திய நிர்வாகத்திற்கு யாதவின் சேவைகள் அவ்வளவாக தேவைப்படவில்லை. எனவே, அவர் டெஸ்ட் அணியில் மீண்டும் வருவதற்கு 2 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், பும்ராவும் தற்போது இல்லை. எனவே மேலும் ஒரு ஸபின்னர் தேவைப்பட்டால் நான்காவது டெஸ்டின் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

Kuldeep

- Advertisement -

2.உமேஷ் யாதவ் :

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் யாதவ் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அவர் முக்கிய கட்டங்களில் சரியாக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சாளராகவும் இருந்து வருகிறார். அவர் விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே ஆக்ஷர் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு நிகரான ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால், யாதவ் ஒரு சரியான தேர்வாக இருப்பார்

3. முகமது சிராஜ் :

சிராஜின் கதை ஒரு திரைப்படத்திற்கான கதைக்களமாக மாறும் அளவுக்கு பரபரப்பானது. இப்போது வரை, அவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவரது ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, எல்லோரும் அவரை பாராட்டினர். 14 விக்கெட்டுகளுடன் அவர் அந்த தொடரில் தனக்கன ஒரு பெயரை வாங்கி கொண்டார். இந்நிலையில் பும்ரா இல்லாதது அவருக்கு சற்று வாய்ப்பை எளிதாக்குகிறது.

siraj

பேட்டிங்குக்கும் சிராஜ் ஒரு முனையில் நல்ல ரொட்டேட்டராக இருக்க முடியும். அஸ்வினுக்கு சென்னையில நின்று உதவி செய்தபோது அவரது பொறுமையை நாம் கண்டோம். அது போல தேவைப்படும் இடங்களில், அவரால் சில பெரிய சிக்ஸர்களை எளிதாக அடிக்க முடியும். எனவே, பும்ராவுக்கு சரியான மாற்று வீரராக முகமது வீரர் சிராஜ்உம் கணக்கில் உள்ளார்.