ஐபிஎல் வரலாற்றில் அதிக ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய டாப் அணிகளின் பட்டியல் – டாப் 3 அணிகள் இதோ

Csk-vsMi
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின் வரும் மே 29-ஆம் தேதியன்று இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

ipl

- Advertisement -

கிங் ஆஃப் நாக்-அவுட்:
குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் இம்முறை முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல மிகத் தீவிரமாகப் போராட உள்ளன. அதனுடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இணைய உள்ளன.

ashwin csk

பொதுவாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வாங்க வேண்டுமானால் அதற்கு முதலில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று எனப்படும் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும். அதற்கு லீக் சுற்றில் குறைந்தது 7 – 10 வெற்றிகளை பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த 7 – 10 வெற்றிகள் என்பது சொல்வதற்கு சுலபமாக இருக்கலாம். ஆனால் பெறுவதற்கு மிக மிகக் கடினமான ஒன்றாகும். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகள் கடந்த பல வருடங்களாக இந்த சுற்றில் காலடி எடுத்துவைக்க முடியாமல் லீக் சுற்றுடன் நடையைக் கட்டி வருகின்றன.

குறிப்பாக பெங்களூரு போன்ற ஒருசில அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலே அதை கோப்பையை வென்றது போல அந்த அணி ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு பிளே-ஆப் சுற்றுக்கு செல்வது என்பது ஒரு கடினமான செயலாகும். இருப்பினும் ஒரு சில அணிகள் தங்களது தொடர்ச்சியான சிறந்த செயல்பாடுகளால் பிளே ஆஃப் சுற்றுக்கு அசால்டாக தகுதி பெற்றுவிடும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. சென்னை சூப்பர் கிங்ஸ்: பிளே ஆஃப் சுற்றுக்கு இலக்கணமாய் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காலம் காலமாக இருந்து வருகிறது. ஆம் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008இல் பைனல் வரை சென்று தோற்ற அந்த அணி 2009இல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும் 2010ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2011இல் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது.

அதன்பின் 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி கோப்பையை வாங்க முடியவில்லை. அந்த நேரத்தில் அந்த அணியின் ஒருசில உரிமையாளர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியதால் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ராஜஸ்தான் அணியுடன் ஐபிஎல் தொடரில் விளையாட தடை பெற்றது. அதன்பின் 2018இல் மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த முதல் வருடத்திலேயே 3-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

- Advertisement -

csk 1

அதை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்று மும்பையிடம் அடி வாங்கிய அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 2020ஆம் ஆண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் மிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்தது. ஆனால் அதற்கு அடுத்த வருடமே மீண்டெழுந்த அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன் 4-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. மொத்தத்தில் இதுவரை பங்கேற்ற 12 சீசன்களில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி ஐபிஎல் தொடரில் அதிக முறை நாக் – அவுட் தகுதி பெற்ற அணி என்ற சாதனை படைத்துள்ளது.

2. மும்பை இந்தியன்ஸ்: 5 முறை கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

mumbaiஅதன்பின் ரோகித் சர்மா தலைமையில் விஸ்வரூபம் எடுத்து அந்த அணி 2013, 2014, 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் பிளே-ஆப் சுற்றுக்கு சென்று 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தது. மொத்தத்தில் இதுவரை பங்கேற்ற 14 சீசன்களில் 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மும்பை இப்பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இந்த பட்டியலில் 3-வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்த 2 அணிகளுமே வரலாற்றில் இதுவரை தலா 7 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இருப்பினும் அதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

Gambhir

மறுபுறம் 7 முறை தகுதி பெற்ற கொல்கத்தா 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் இந்தப் பட்டியலில் உண்மையான 3-வது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக அந்த அணிக்கு 2 முறை சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்த கௌதம் கம்பீர் தலைமையில் 2011, 2012, 2014, 2016, 2017 ஆகிய 5 வருடங்கள் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் தலைமையில் பிளே சுற்றை தொட்ட அந்த அணி கடந்த 2021-ஆம் ஆண்டு இயன் மோர்கன் தலைமையில் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற போதிலும் இறுதிப்போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்தது.

Advertisement