இலங்கை தொடரில் விளையாடும் இந்த 3 பேருக்கு இந்திய அணியில் பெரிய எதிர்காலம் காத்திருக்கு – லிஸ்ட் இதோ

ipl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது தற்போது இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அணியில் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியாது இலங்கை சென்றுள்ளது. ஷிகர் தவான் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் இந்த தொடரில் செயல்பட இருப்பதால் இந்திய அணியின் ஆட்டம் எவ்வாறு அமையப் போகிறது என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

dravid

- Advertisement -

இந்நிலையில் இந்த இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வருங்காலத்தில் இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் என்பதன் காரணமாக இந்த தொடரானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக மூன்று வீரர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. அந்த வீரர்களில் முதல் முதலாவது வீரர்

sky 2

சூர்யகுமார் யாதவ் : ஐபிஎல் போட்டிகளில் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் வாய்ப்பின்றி தவித்து வந்தார். அவரது மிக நீண்ட நாள் எதிர்பார்பிற்கு முற்றுப்புள்ளியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தான் விளையாடிய முதல் போட்டியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியிலேயே அட்டகாசமாக விளையாடி அரைசதம் அடித்து சர்வதேச கிரிக்கெட்டை சிறப்பாக துவங்கியுள்ளார்.

இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் இடம் இடம் பெற வேண்டும் என்று இலட்சுமணன் தெரிவித்திருந்த நிலையில் இந்த இலங்கை தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால் மேற்படி உலக கோப்பை தொடரில் மட்டுமில்லாது எதிர்கால இந்திய அணியிலும் அவர் முக்கிய இடம் பிடிக்க வாய்ப்புண்டு.

- Advertisement -

shaw-2

ப்ரித்வி ஷா : தற்போதைய அணியில் ஏகப்பட்ட ஓப்பனர்கள் இடம்பெற்றிருக்கும் வேளையில் அடிக்கடி இந்திய அணியின் துவக்க வீரர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் டி20 உலக கோப்பை தொடரில் கோலி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இந்திய அணியில் மாற்றம் வேண்டுமெனில் ஐபிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா இலங்கை தொடரில் தன் திறமையை நிரூபித்து நிச்சயம் அவர் நிரந்தர துவக்க வீரராக இந்திய அணிக்கு திரும்பலாம்.

வருண் சக்கரவர்த்தி : அதேபோன்று தற்போதைய இந்திய டி20 அணியில் ஸ்பின்னர்களாக சாஹல் மற்றும் ஜடேஜா இருந்தாலும் சாஹலின் பந்துவீச்சு தற்போது கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு மாற்று வீரராக நிச்சயம் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இருக்க முடியும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தனது அபாரமான பந்து வீச்சை ஐபிஎல் தொடர்களில் வெளிப்படுத்தி வருண் சக்கரவர்த்தி முக்கிய முன்னணி பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் தடுத்து வருகிறார். இதன் காரணமாக இலங்கை தொடரில் இவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியில் நிரந்தர சுழற்பந்து வீச்சாளராக மாற வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் முழுவதும் இவர்கள் மூவரும் ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement