ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஆடியிருக்க வேண்டிய 3 திறமையுள்ள வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி கொண்டிருக்கிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து தொடரை கோட்டைவிட்டுவிட்டது இந்திய அணி. தற்போது ஆஸ்திரேலியாவில் ஆடிக் கொண்டிருக்கும் இந்த இந்திய அணி மிகச் சிறந்த அணியாக இருந்தாலும் ஒரு சில வீரர்கள் இடம் பெற்று இருந்தால் கண்டிப்பாக இந்த தொடர் அப்படியே மாறியிருக்கும் என்று எண்ணப்படுகிறது. அப்படிப்பட்ட 3 திறமையான டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டிய தகுதியான வீரர்களை தற்போது பார்ப்போம்.

sky

- Advertisement -

சூரியகுமார் யாதவ் :

தொடர்ந்து பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் மும்பையை சேர்ந்தவர். உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை தொடர், விஜய் ஹசாரே தொடர், சையது முஷ்டாக் அலி கோப்பை என நடைபெறும் அனைத்து தொடர்களிலும் மிகச் சிறப்பாக ஆடி வருபவர். தொடர்ந்து இந்த வருட ஐபிஎல் தொடரிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார். இவரது பெயர் கண்டிப்பாக இந்த வருட இந்திய அணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே கேஎல் ராகுல், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்ற பல வீரர்கள் அந்த இடத்திற்குப் போட்டி போட்டு கொண்டிருப்பதால் புதிதாக ஒரு வீரரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கவில்லை. ஆனால் இவர் இடம்பெற்றிருக்கலாம் என்பது ரசிகர்களின் ஆசை.

axar

அக்ஷர் பட்டேல் :

- Advertisement -

இவர் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் இடம் பிடித்தவர். தற்போது இவருக்கு 26 வயதாகிறது. ஜடேஜாவை போன்ற ஒரு வீரர் இவர். 38 ஒருநாள் போட்டியிலும் 11 டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். வித்தியாசமாக இவரை அழைத்துச் சென்றிருந்தால் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து இருக்கலாம் மேலும் ஆஸ்திரேலியாவில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர் இவர்.

Ashwin 2

ரவிச்சந்திரன் அஸ்வின் :

கடந்த மூன்று வருடமாக இந்திய ஒருநாள் அணியில் இடம் இல்லாமல் தவித்து வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஒரு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர். இந்த வருட ஐபிஎல் தொடரிலும் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். விராட் கோலி தற்போது குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை நம்பியே ஆடுகிறார். ஆனால் அவர்களது பந்துவீச்சு சமீபகாலமாக செல்லுபடியாவதில்லை. இரண்டு போட்டிகளிலும் 70 ரன்களுக்கு மேலாக கொடுத்துவிட்டார் சாஹல். அஸ்வின் இந்த அணியில் இடம் பெற்று இருந்தால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும்.

Advertisement