சர்வதேச டி20 போட்டிகளில் சிக்ஸர் அடிக்காமல் விளையாடிய டாப் 3 நட்சத்திர பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Umpire
- Advertisement -

டி20 கிரிக்கெட் போட்டிகள் வந்ததிலிருந்து பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. 3 மணி நேரத்திலேயே நடைபெற்று முடியும் இந்த போட்டியில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பேட்ஸ்மேன்கள் சிக்சர்களை பறக்க விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பேவர்பிளே மற்றும் டெத் ஓவர்களிலும் பேட்ஸ்மேன்கள் சிக்சர்களை அடித்து ரசிகர்களை மகிழ்விப்பார்கள். மொத்தம் 120 பந்துகளை கொண்ட போட்டி என்கின்ற காரணத்தினால் ஒரு போட்டியில் குறைந்தபட்சம் 8 முதல் 10 சிக்ஸர்களாவது டி20 கிரிக்கெட்டில் வந்துவிடும்.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட ஒரு பார்மேட்டிலும் சிக்சர்கள் அடிக்காமல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மூன்று சிறப்பான பேட்ஸ்மேன்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் காண உள்ளோம். 1) ஆண்ட்ரு ஸ்டார்ஸ் : இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்தும் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் 73 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும் இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சிக்சர் விளாசிய கிடையாது.

strauss

2) அம்பத்தி ராயுடு : சென்னை அணிக்காக ஏகப்பட்ட சிக்சர்களை இவர் விளாசித் தள்ளியுள்ளார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 5 டி20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள அவர் 42 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இவரும் சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்காமலேயே அணியில் இருந்து வெளியேறினார்.

3) ஸ்டீபன் பிளமிங் : தற்போதைய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர் நியூசிலாந்து அணிக்காக ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மிகப் பிரபலமான பேட்ஸ்மேனான இவர் தனது கிரிக்கெட் கெரியரில் 5 டி20 போட்டிகளில் விளையாடி 110 ரன்களை அடித்துள்ளார். அதில் 80 ரன்கள் பவுண்டரி மூலம் கிடைத்ததே தவிர ஒரு சிக்சர் அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

fleming

இதேபோன்று உங்களுக்கு தெரிந்த பிரபலமான பேட்ஸ்மேன்கள் யாரும் சிக்ஸர் அடிக்காமல் கரியரை முடித்திருந்தால் கமென்ட் செய்யவும்.

Advertisement