உலக கிரிக்கெட் வரலாற்றில் எளிதில் வெளிவராத 10 நம்பமுடியாத நிகழ்வுகள்..!

- Advertisement -

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் நிகழ்தேறியுள்ளது, அது நம் பார்வையில் இருந்து தப்ப அந்த அளவிற்கு ஒன்றும் வாய்ப்பில்லை. ஆனால், நீங்கள் அறிந்திடாத சில சுவாரசியமான விடயங்களும் கிரிக்கெட் உலகில் நடந்தேறியுள்ளது. அதிலிருந்த ஒரு வேளை நீங்கள் அறிந்திடாத 10 விடயங்களை பற்றி மட்டும் இங்கே காணலாம்.

oceancricket

- Advertisement -

*1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 37 பந்துகளில் 100 ரன்களை அடித்திருந்தார். அவர் அந்த போட்டியில் விளையடிய போது அவர் பயன்படுத்திய பேட், இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கபடும் சச்சின் டெண்டுல்கருடையது.

* கிரிக்கெட்டின் 137 வருட டெஸ்ட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் சிக்சர் அடித்தது மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில் தான். இவர் அந்த சாதனையை 2012 ஆம் ஆண்டு படைத்தார்.

* 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அப்பாஸ் அலி அரை சதம் அடித்தார். அப்போது அவரை வாழ்த்த வந்த இளம் பெண் ஒருவர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். கிரிக்கெட் வரலாற்றில் ரசிகை ஒருவர் மைதானத்தில் கிரிக்கெட் வீரருக்கு முத்தம் கொடுத்தது அது தான் முதல் முறை.

- Advertisement -

* டெஸ்ட் போட்டியில் 5 நாட்கள் விளையாடிய ஒரே இந்திய ஜோடி எம் எல் ஜெய்ஷிம்மா மற்றும் ரவி சாஸ்திரி தான்.

* இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் விளையாடிய ஒரே இந்தியா கிரிக்கெட் வீரர் இஃதிகர் அலி கான் தான். இவர் சைப் அலி கானின் முப்பாட்டனாவர்.

- Advertisement -

beachcricket

* கிரிக்கெட் வரலாற்றில் டான் ப்ராட்மேனை ஹிட் விக்கெட் செய்தது லாலா அமர்நாத் என்ற வீரர் தான்.

* இந்திய மட்டும் தான் 60,50 மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோபையை வென்றுள்ள அணி.

- Advertisement -

* ஆஸ்திரேலிய வீரரான ஆலன் பார்டர் தொடர்ந்து 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே ஒரு வீரராவர்.

* ஆஸ்திரேலிய வீரரான பீட்டர் சிட்டல் மட்டும் தான் தனது பிறந்தநாள் அன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட் ட்ரிக் விக்கெட்டை எடுத்த ஒரே வீரராவார்.

* பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ராபின் சிங் தனது வாழ் நாளில் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் தான் விளையாடியுள்ளார்.

Advertisement