இப்படி இருந்தா எப்படி விளையாடறது ? நியூசிலாந்துக்கும் இதே கதிதான் – அடுத்தடுத்து விக்கெட் விழ இதுதான் காரணமாம்

ind-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் மழை காரணமாக 55 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்துள்ளது.

Ind-1

- Advertisement -

இந்திய அணி சார்பாக ரஹானே 38 ரன்களும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கோலி, புஜாரா மற்றும் விஹாரி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அகர்வால் சற்று தாக்குப்பிடித்து 34 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அறிமுக வீரர் ஜேமிசன் 14 ஓவர்களில் 32 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவர் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் சிறப்பான வீரர்களான கோலி, புஜாரா, விஹாரி ஆகியோர் ஆகும். இந்நிலையில் இந்த போட்டியில் அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் விழ காரணம் யாதெனில் மைதானத்தில் வீசும் பலமான காற்றே காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் காற்றின் வேகத்தில் சரியான வேகத்தில் பேட்ஸ்மேன்கள் பேட்டை நகர்த்த முடியாமல் போகிறது.

Jamieson

அதுமட்டுமின்றி பந்து அதிகமாக ஸ்விங் ஆகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்க அது எளிதான வாய்ப்பாக அமைகிறது. மேலும் பலத்த காற்றினால் அவ்வபோது வீரர்கள் தடுமாறுவதை பார்க்க முடிந்தது. இவ்வளவு மிகுதியான காற்றில் கேட்ச் பிடிப்பது சற்று எளிதாக இருக்காது. மேலும் நாளைய போட்டியில் இந்திய அணி விரைவில் ஆட்டமிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Kohli

மேலும் அதனை தொடர்ந்து நியூசிலாந்து விளையாடினாலும் அவர்களுக்கும் இதே நிலைமைதான் ஏற்படும் என்று தெரிகிறது. இன்று மழை பெய்து வருவதால் நாளை காலை மைதானம் சற்று உலர்ந்திருந்தாலும் என்றாலும் மைதானம் நாளைக்கும் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து வீரர்களும் நாளைய ஆட்டத்தில் விரைவில் விக்கெட்டுகளை இழக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement