நேற்றைய போட்டியில் நடராஜன் விளையாடாததற்கு காரணம் இதுதான் – டாம் மூடி விளக்கம்

Moody
- Advertisement -

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 9 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற எளிமையான வாய்ப்பிருந்தும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை மிடில் ஆர்டரில் சொதப்ப மும்பை அணிக்கு எதிராக மோசமான தோல்வியை பெற்றனர். இதே போன்று கடந்த போட்டியிலும் மிடில் ஆர்டரில் மோசமான ஆட்டத்தால் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

bhuvi

- Advertisement -

இந்நிலையில் 2 போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் நேற்று 3 ஆவது போட்டியை விளையாடிய சன் ரைடர்ஸ் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இடம் பெறாமல் போனது பெரும் விவாதமாக மாறிவருகிறது. நெட்டிசன்கள் பலரும் நடராஜனை அணியில் சேர்க்காததற்கு ஹைதராபாத் அணியை வசைபாடி வருகின்றனர். மேலும் வெற்றிப்பாதைக்கு திரும்பவேண்டிய முக்கியமான போட்டியில் அவரை சேர்க்காதது தவறு என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடராஜன் குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அந்த அணியின் டைரக்டர் டாம் மூடி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

nattu 1

நடராஜனை இந்த போட்டிக்கான அணியில் இருந்து நீக்கவில்லை, அவருக்கு ஓய்வு மட்டுமே கொடுத்துள்ளோம். ஏனெனில் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரிலிருந்து, தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால் அவரின் பணிச்சுமையை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் இந்த தொடரில் இன்னும் முக்கியமான போட்டிகள் நிறைய வரவிருப்பதால் இந்த போட்டியில் அவருக்கு ஓய்வளித்துளோம் என்று டாம் மூடி கூறினார்.

nattu

ஏற்கனவே முதல் 2 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு ஹைதராபாத் அணி திரும்ப வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் நடராஜனுக்கு ஓய்வு அளித்தது தவறென்று டாம் மூடி கூறிய கருத்திற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement