ஒருநாள், டி20, டெஸ்ட் அனைத்திலும் சிறந்த 3 பெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் இவர்கள்தான் – டாம் மூடி தேர்வு

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ் ஆகிய இருவரையும் அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்று கூறியுள்ளார்.

Kallis

- Advertisement -

இருவரும் இரண்டு விதமான போட்டிகளிலும் தலை சிறந்த ஆல்ரவுண்டர்கள், இருவரில் யார் சிறந்த வீரர் என்று தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். இந்த இருவருமே பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்த கூடியவர்கள் என்று புகழ்ந்துள்ளார். இதில் ஜாக் காலிஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,189 ரன்களை குவித்து 298 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11589 ரன்களையும் 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் பேட்டிங்கில் இந்திய அணியின் வீரரான டிராவிட்க்கு இணையானவர் என்றும் பந்துவீச்சில் ஜாஹீர் கானுக்கு இணையானவர் என்றும் தெரிவித்துள்ளார்.அதேநேரத்தில் மூன்றாவதாக 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பை வென்று கொடுத்த இம்ரான் கானை சிறந்த ஆல்ரவுண்டர் என்று கூறியுள்ளார் அவர் .

எனவே ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை காலிஸ், கேரி சோபர்ஸ் மற்றும் இம்ரான் கானை அவர் சிறந்த ஆல்ரவுண்டர்களாக தேர்வு செய்துள்ளார். அதே வேளையில் டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் பற்றி பேசிய அவர் ரசல், ஷேன் வாட்சன் மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

Russell

இதில் தற்காலத்தில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களாக திகழும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரின் தேர்வு நியாமான ஒன்றாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement